கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பொன்விழா ஆண்டு கலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கலையரங்கத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய ஆளுநர் பேசுகையில் சிவராத்திரி தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டவர் மகளிர் தின வாழ்த்துக்களையும் கூறினார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவித்தார். பெண்கள் முன்னேற்றத்திற்கு கல்வி ஒரு சிறந்த ஆயுதம் என குறிப்பிட்டவர் இந்தக் கல்லூரியில் அதிக அளவில் மாணவிகள் இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு உலக அரங்கில் இந்தியா உரிய இடத்தை பெறவில்லை என்றும் இப்போது உலக அளவில் இந்தியாவின் நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.கடந்த பத்தாண்டுகளில் உலக பொருளாதரத்தில் பதினொன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகவும் விரைவில் மூன்றாம் இடம் பிடிக்க உள்ளதாகவும் கூறினார் இதற்கு இளம் தலைமுறையினரின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என குறிப்பிட்டார். பெண்கள் முன்னெடுத்துச் செல்லும் முன்னேற்றமாக நாடு வளர்ச்சி அடைந்து வருவதாகவும் பெண்களுக்கான கல்வி சுகாதாரம் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார்.
இன்றைக்கு பெண்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்து வருவதாகவும் பெண்கள் தொழில் முனைவோராக உருவாவதில் மத்திய அரசின் முத்ரா கடன் உதவி திட்டம் பயனுள்ளதாக அமைந்ததாக குறிப்பிட்டார்.மத்திய அரசின் ஜந்தன் திட்டம் அனைவருக்கும் ஆன வீடு திட்டம் ஆகியவற்றில் பெருமளவில் மகளிர் பயன்பெற்றுள்ளதாக ஆளுநர் கூறினார். பெண்கள் தற்போது நிலவுக்கும் சூரியனுக்கும் விண்வெளி அனுப்புவதில் பங்களித்து வருவதாகவும் விமானப்படையில் பெண்கள் சிறப்பான வகையில் சேவை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் அதிக அளவில் பெண்கள் அரசியல் தலைவர்களாக ஆட்சியாளர்களாக உருவாக்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.பெண்கள் சொந்த காலில் நிற்கும் பொழுது தான் அவர்களுக்கான சுயமரியாதை கிடைக்கும்- மகளிர் தின விழாவில் ஜனாதிபதி விருது பெற்ற லதா சுந்தரம் பேச்சு.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் நர்சிங் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கே.ஜி நிறுவனத்தின் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் சமூக பணிக்காக குடியரசு தலைவர் விருது பெற்ற லதா சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் சிறப்புரையாற்றிய லதா சுந்தரம், Women என்பதிலேயே Men இருப்பதால் இந்த நாள் ஆண்களுக்குமான நாள் என்றார். பெண்களின் ஸ்டேட்டஸை வைத்து தான் அந்நாட்டின் ஸ்டேட்டஸ் நிர்ணயிக்கப்படுவதாகவும் கூறினார்.
நான் அளிக்கும் மோட்டிவேஷன் பேச்சுகள் ஒரு நாள் முழுக்கவும் அளித்தாலும் உங்களுக்கு வராது எனவும் மோட்டிவேசனை உங்களுக்குள் நீங்கள் தான் வர வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். பெண்கள் ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது மிக முக்கியம் எனவும் அதேபோல் சுயமரியாதை என்பதும் மிகவும் முக்கியம் என தெரிவித்தவர் நாம் நமது சொந்த காலில் நிற்கும் பொழுது தான் அந்த சுயமரியாதை என்பது கிடைக்கும் என தெரிவித்தார். நம்முடைய பாதுகாப்பை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், உறங்கும் பொழுது கூட பெண்கள் விழிப்புடன் தான் இருக்க வேண்டும் என தெரிவித்தவர் அப்படிப்பட்ட நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். எந்த ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறதோ அந்த ஆண் அனைத்து பெண்களிடமும் தன்மையுடன் நடந்து கொள்கிறான் என தெரிவித்தார். மேலும் அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு தடங்கல்களையும் அதிலிருந்து அவர் சாதித்து வந்ததையும் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“