5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், தனது பதவிக்காலம் முடிந்துவிட்டதால் பதவி நீடிப்பு வழங்கும்படி கோரிக்கை வைத்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இது குறித்து டெக்கான் க்ரானிக்கல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 5 நாள் பயணமாக கடந்த ஜூலை 15-ந் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்ற, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜூலை 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தார். இந்த சந்திப்பில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீட்டிப்பு குறித்து கோரிக்கை வைத்துள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றனர்.
ஆளுனர் ஆர்.என்.ரவி தமிழகத்தின் ஆளுனராக பொறுப்பேற்பதற்கு முன்பு, நாகாலாந்தின் ஆளுநராக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி நாகாலாந்தில் ஆளுனராக பதவியேற்ற ஆர்,என்.ரவி, அடுத்து செப்டம்பர் 18, 2001 அன்று தமிழக ஆளுனராக பதவியேற்றுக்கொண்டார். இந்த வகையில் பார்த்தால் அவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் நிறைவடைத்துள்ளது. அதே சமயம் அவரின் பதவிக்காலம், நாகலாந்தில் பதவியேற்ற நாளிலிருந்து கணக்கிடப்படுமா அல்லது தமிழகத்தில் பதவியேற்ற நாளிலிருந்து ஐந்தாண்டு பதவிக்காலம் கணக்கிடப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதனிடையே 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுனர் ஆர்.என்.ரவி, இந்த 5 நாளில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மத்திய அமைச்சர்களை சந்திக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான தனது சந்திபு ‘ஆக்கப்பூர்வமானது’ என்று கூறியுள்ள ஆர்.என்.ரவி‘தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலைகள் மற்றும் மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பிற்கான க்கங்கள்’ குறித்து விவாதித்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அமித் ஷா, 'நமது மக்களை பாதிக்கும் பிரச்னைகள் மற்றும் அவர்களின் நலனில் அபரிமிதமான அக்கறை கொண்டவர்' என கூறியுள்ள ஆர்.என்.ரவி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேற்று சந்தித்து, தமிழகத்தில் ஒரு உயர் நிலை உயர்கல்வியை கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் மூலம், 'தமிழக மக்கள் சேவையில் அவரது அக்கறை, தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலின் பலன் கிடைத்தது' என்றும் கூறியுள்ளார். அதன்பிறகு, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுனை சந்தித்துப் பேசினார்
தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாக மாநிலங்களவையில் இருந்து வெளியேறியது உட்பட, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசாங்கத்துடன் தொடர்ச்சியான சுனக்கங்களை கொண்டிருந்த ஆர்.என்.ரவி, நாகாலாந்தில் சர்ச்சைக்குரிய ஆளுநராக இருந்துள்ளார். அங்கிருந்து அவர் வெளியேறும்போது, கோஹிமாவின் பத்திரிகையாளர்கள் அவருக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியை பிளஸ் க்ளப் புறக்கணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.