ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக , 2 நாள் பயணமாக இன்று திருவண்ணாமலை செல்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாள் பயணமாக இன்று திருவண்ணாமலை செல்கிறார்.
அங்கு பகல் 12.30 மணிக்கு கிரிவல பாதையில் உள்ள, விஜிபாலாஜி திருமண மண்டபத்தில் சாதுக்கள் மற்றும் பல்வேறு ஆன்மிகக் குருக்களை சந்தித்துப் பேசுகிறார். அதன்பின், வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த இயற்கை விவசாயிகளுடன் உரையாடுகிறார்.
தொடர்ந்து ரமணாஸ்ரமம் செல்லும் அவர், மாலையில் யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்துக்குச் செல்கிறார். இரவு 9 மணியளவில் கிரிவல பாதையில் சிறிது தூரம் நடந்து செல்கிறார். பின்னர் இரவு அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.
நாளை (ஆகஸ்ட் 11) காலை காலை 7.30 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதன்பின் மகரிஷி வித்யாமந்திர் பள்ளி மாணவர்களுடன் உரையாடுகிறார்.
அங்கிருந்து காலை 9.20 ஜவ்வாது மலைக்கு புறப்படுகிறார். ஜமுனாமரத்தூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின் குனிகாந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் பள்ளியில் மாணவ-மாணவிகள், பெற்றோர்களை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சாலையில் உள்ள காவலூர் விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்கிறார். அதன்பின், செஞ்சி கோட்டை மற்றும் வெங்கடரமணா ஆலயத்துக்குச் சென்று சென்னை திரும்புகிறார்.
ஆளுநர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“