தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் – சபாநாயகர் அறிவிப்பு
அதன்படி, பொங்கல் பரிசாக ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு ரூபாய் 3 ஆயிரமும், ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும்,
சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும்,
முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிறப்பு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூபாய் வழங்கப்படும்.
மேற்கூறிய மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு ரூ. 221 கோடியே 42 லட்சம் செலவு ஏற்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil