/indian-express-tamil/media/media_files/z3Nfrv9UEE3XJTxsZOnR.jpg)
தமிழ்நாடு முழுவதும் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 3 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் காவல்துறையில், அவ்வப்போது பணியிட மாற்றம் நடைபெற்று வருவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் மற்றும் பதவி உயர் பெற்ற அதிகாரிகளின் விபரங்கள் குறித்து தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை தலைமையக டிஐஜி மகேஷ்குமார், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி ஜெயந்தி, சென்னை காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி, தமிழ்நாடு காகித ஆலை முதன்மை கண்காணிப்பு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளா.
சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் பேகர்லா செபாஸ் கல்யாண், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகவும், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர். அதேபோல், சேலம் சரக டிஐஜி உமா, விழுப்புரம் சரக டிஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குற்ற ஆவண காப்பக எஸ்.பி. நாகஜோதி, தமிழ்நாடு சீருடை பணியாளார் தேர்வாணைய எஸ்.பியாகவும், சென்னை தலைமையக எஸ்.பி அமனத் மன், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் துணை ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சென்னை பயிற்சி பள்ளி எஸ்.பி லாவண்யா, சென்னை குற்ற ஆவண காப்பக எஸ்.பி.யாகவும், சேலம் தலைமையக துணை ஆணையர் கீதா, சென்னை பெருநகர காவல் தலைமையக துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை நகர் மேற்கு துணை ஆணையர் கீதா, சேலம் தலைமைய துணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் நகர் தெற்கு துணை ஆணையர் வேல் முருகன், சென்னை தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையராகவும், சென்னை தாம்பரம் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பிரபாகர், சென்னை சைபர் கிரைம் எஸ்.பி.யாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், நாகப்பட்டினம் எஸ்.பி.அருண் கபிலன், சென்னை தலைமையக துணை ஐஜியாகவும், குடிமை பொருள் வழங்கல் துறை மதுரை மண்டல எஸ்.பி செல்வகுமார், நாகப்பட்டிணம் எஸ்.பி.யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேனி ஏஎஸ்பி கேல்கர் சுப்ரமண்யா, பதவி உயர்வு பெற்று சேலம் நகர் தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குளச்சல் ஏஎஸ்பி கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம், பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர் வடக்கு துணை ஆணையராகவும், நாங்குநேரி ஏஎஸ்பி பிரசன்னா குமார், பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி நகர் மேற்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.