தமிழக அரசின் தலைமை கொறடாவாக முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலில் வென்று, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைத்தது முதல் தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி.செழியன் செயல்பட்டு வந்தார்.
இந்தநிலையில், தமிழக அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக கோவி.செழியன் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார். டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், கோவி.செழியன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கான இலாகாக்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கோவி.செழியன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதையடுத்து, தலைமை கொறடாவாக கா.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வந்த ராமச்சந்திரன், தற்போதையை அமைச்சரவையில் மாற்றத்தில் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“