/indian-express-tamil/media/media_files/8fdvBmlSzrL2PGBVxV1W.jpg)
திண்டுக்கல் பேருந்து
ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில் அரசு பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை இடம் பெற்றதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தென் தமிழகத்தின் பிரதான பேருந்து நிலையமாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு கொண்டு வருகிறது.இந்த காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை,திருப்பூர்,காரைக்குடி மதுரை, திருச்சி, தேனி, கம்பம், கோவை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு தென் தமிழகத்திற்கும்,வட தமிழகத்திற்கும் இரவு பகலாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் உலக பொதுமறை வாக்கியமான திருக்குறளையும் அதனுடைய அதிகாரங்களையும் பேருந்தில் இடம் பெற செய்து தமிழின் பெருமைகளை உணர்த்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து உள்ளது. ஆனால், திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்கு உட்பட்டTN 57 N 2410 என்ற அரசு பேருந்தில் திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பேருந்து என்று இடம் பெற்றிருக்கும் மின்னணு பெயர் பலகையில் சீன மொழி இடம் பெற்று இருந்தது.
அந்த அரசு பேருந்து சீன மொழியிலேயே திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சிக்கு சென்றதால் பேருந்தில் ஏற இருந்த பயணிகளும், காத்திருந்த பயணிகளும் தமிழ் சொற்களுக்கு பதிலாக சீன மொழி இடம்பெற்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தமிழ் நாட்டில் ஹிந்தி மொழிக்கே எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில் சீன மொழியுடன் அரசு பேருந்து இயங்கியது பெறும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இது குறித்து போக்குவரத்து துறை ஊழியர்களுடன் கேட்டபோது அந்த டிஸ்பிலேயில் வரக்கூடிய எழுத்துக்களில் ஃபால்ட் ஏற்பட்டிருந்ததால் இப்படி தெரிகின்றது விரைவில் சரி செய்வோம் என்று கூறியுள்ளனர்.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.