Advertisment

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- ஜன.8 இல் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை

தொழிலாளர் நல ஆணையம் போக்குவரத்து துறை, தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Compensation - SETC BUS

TN Govt Bus Strike

வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள நிலையில், வரும் திங்கள்கிழமை (ஜன.8) டி.எம்.எஸ் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்துத் துறை மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

Advertisment

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், போக்குவரத்துத் துறையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை வரும் 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏராளமானோர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊா்களுக்கு அடுத்த வாரம் செல்லத் தொடங்குவார்கள். அந்த நேரத்தில் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், வரும் ஜனவரி 9-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும்.

சேம மற்றும் தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிபுரிய வேண்டும், என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.

ஆனால், திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், தொழிலாளர் நல ஆணையம் போக்குவரத்து துறை, தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, ஜனவரி 3 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை.

இதையடுத்து 19 ஆம் தேதி, மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தேதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைக்கு ஏற்ப பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே, வரும் திங்கள்கிழமை (ஜன.8) டி.எம்.எஸ் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்துத் துறை மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று (ஜன.5) தொழிற்சங்க நிர்வாகிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பொங்கலுக்குள் உடன்பாடு எட்டப்படுமா என்பது வரும் திங்கள்கிழமை தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment