தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஒரு கால பூஜைக்காக ரூ.129.59 கோடியை தமிழக அரசு, தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் முதலீடு செய்துள்ளது.
கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்திற்காக ரூ.129.59 கோடியை தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (திங்கள்கிழமை) டெபாசிட் செய்தார். டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து கிடைக்கும் வட்டியானது தமிழகத்தில் உள்ள 12,959 கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்காக பயன்படுத்தப்படும். இதற்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அதுல்ய மிஸ்ராவிடம் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜே.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய கோவில்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து, கோவில் நிர்வாக நிதியின் கீழ், 5 கோடி ரூபாய் கார்பஸ் நிதியை, இந்து சமய அறநிலையத்துறை உருவாக்கியது. இந்த நிதியானது டெபாசிட் செய்யப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டியானது, சிறிய கோவில்களில் நடைபெறும் ஒரு பூஜைக்கு பயன்படுத்தப்படும்.
இந்தநிலையில், அர்ச்சகர்களுக்கு நிதியுதவி திட்டம், சிறிய கோவில்களுக்கு நிதியுதவி, ஒரு கால பூஜை திட்டம் உள்ளிட்டவற்றிற்காக, பல்வேறு கோவில்களின் அர்ச்சகர்கள், முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil