Advertisment

மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டம்; ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க தமிழக அரசு திட்டம்

சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட பணிகள்; ஸ்ரீபெரும்புதூர், கேளம்பாக்கம், கிளாம்பாக்கம் வரை வழித்தடங்களை நீட்டிக்க தமிழக அரசு திட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டம்; ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க தமிழக அரசு திட்டம்

Tamilnadu Govt extends Metro project to SriPerumbudur on phase 2: திருமழிசை வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு ஒரு மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான முன்மொழிவோடு, மெட்ரோ ரயில்  2ஆம் கட்டத்தின் மூன்று வழித்தடங்களை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை தமிழக அரசு மேற்கொள்ள உள்ளது. 61,843 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9கிமீ தூரத்திற்கான 2 ஆம் கட்ட வழித்தடங்கள் கட்டப்பட்டு 2025க்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இவற்றில் முதலாவதாக, லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் காரிடார்-4 வரை உள்ள 2 ஆம் கட்ட வழித்தடத்தை ஸ்ரீபெரும்பதூர் வரை நீட்டிக்க சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தெரிவித்தார்.

திருமழிசை சாட்டிலைட் டவுன், இன்டர்சிட்டி பஸ் டெர்மினஸ்கள் மற்றும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் வளர்ந்து வரும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மெட்ரோ பாதையின் நீட்டிப்பு உள்ளது. ஏற்கனவே, பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து திருமழிசை செயற்கைக்கோள் நகரம் வரையிலான 4 கி.மீ தூரத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது இந்த பாதை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்கப்படலாம்.

மேலும், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க, இப்போது அடையாளம் காணப்பட்ட இரண்டு தளங்களான பண்ணூர் மற்றும் பாரந்தூர் ஆகிய இரண்டும் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருப்பதால் ஸ்ரீபெரும்புதூருக்கு மெட்ரோ பாதை ஒரு நன்மையாக இருக்கலாம். ஆவடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலான ஒரு வழித்தடத்திற்கான இறுதி இட கணக்கெடுப்பு பணியையும் தெற்கு ரயில்வே மேற்கொள்ள உள்ளது.

திருமங்கலத்தில் இருந்து முகப்பேர் மற்றும் அம்பத்தூர் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயிலின் 5வது வழித்தடத்தை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை அரசு அறிவித்துள்ளது. தற்போது, ​​முன்மொழியப்பட்ட 5 ஆவது வழித்தடம் மாதவரத்தை கோயம்பேடு, ஆலந்தூர் மற்றும் மடிப்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூருடன் இணைக்கிறது. இந்த நீட்டிப்பு, மக்கள் தொகை அதிகம் உள்ள வடமேற்கு சென்னை வட்டாரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சட்டசபையில் நிதியமைச்சர் கூறினார்.

இரண்டாம் வழித்தடமாக, மெட்ரோ ரயிலின் மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே OMR காரிடார்-3 வழியாக செயல்படுத்தப்படும் வழித்தடம் சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும், இதற்காக இந்த பாதையில் அதிகரித்து வரும் குடியிருப்பு வளாகங்கள் மற்றும் வணிக வளர்ச்சி மற்றும் போக்குவரத்து சேவைகளின் தேவையை மதிப்பிடுவதற்கான ஆய்வு நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அடுத்ததாக, கேளம்பாக்கத்திலிருந்து மாம்பாக்கம் மற்றும் வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மெட்ரோ ரயில் பாதையை நீட்டிப்பதன் மூலம் ஜிஎஸ்டி சாலை (NH45) மற்றும் ராஜீவ் காந்தி சாலை இடையேயான இணைப்பையும் அரசாங்கம் பரிசீலிக்கப் போகிறது. இந்த பகுதியில் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்வதாக இந்த திட்டம் அமையும் என்று அமைச்சர் கூறினார்.

இதையும் படியுங்கள்: அரசு பேருந்தில் பயணம்; பெண்களிடம் இலவச பயணம் குறித்து கேட்டறிந்தார் ஸ்டாலின்

4,080 கோடி மதிப்பீட்டில் 12 மெட்ரோ நிலையங்களுடன் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட்ட விரிவாக்கத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை CMRL அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. இது தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்கரனை, பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் போன்ற புறநகர்களை இணைக்கும்.

மேலும், வடசென்னையில் தற்போதுள்ள வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் 1 ஆம் கட்ட நீட்டிப்புப் பாதையானது, மேம்படுத்தப்பட்ட ரயில் நிலைய அணுகலைப் பெறுவதோடு, ஒருங்கிணைந்த மல்டிமாடல் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக ரூ.30 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Metro Rail
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment