தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க தமிழக அரசு சார்பில் ரூ38 கோடி ஒதுக்கீடு செய்து அரசானை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2022 டிசம்பர் முதல் நடப்பு ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவாகள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து கழகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அவ்வப்போது தங்களது பணப்பலன் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான போராட்டங்களில் ஈடுபடுவதும், இதற்கு அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக தீர்வு காண்பதும் வழக்கமான நடைபெற்று வந்த நிலையில்,தற்போது அவர்களின் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு செவிசாய்க்கும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில், பணப்பலன் வழங்க, தமிழக அரசு ரூ38 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் பயனடைவார்கள் என்றும், இந்த பணிக்காலத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு, ஓய்வுகால பணப்பலன் வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு பணப்பலன், மற்றும் 50 சதவீத ஓய்வூதிய வைப்புத்தொகை, உள்ளிட்ட பணப்பலத்துடன் சேர்ந்து இதற்காக மொத்தம், ரூ38.73 கோடி தேவைப்படுவதாக போக்குவரத்து கழகம் சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மாநில போக்குவரத்து கழகத்திற்கு 9.6 கோடி, விரைவு போக்குவரத்து கழகத்திற்கு, ரூ1.1 கோடி தேவைப்படுதாக, குறிப்பிடப்பட்ட நிலையில், விழுப்புரம், ரூ5.8 கோடி, சேலம் 3.6 கோடி, கோவை 4.3 கோடி, கும்பகோணம் 8 கோடி, மதுரை 3.2 கோடி, திருநெல்வேலி 2.9 கோடி நிதி தேவைப்படுதாக போக்குவரத்து துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, இதற்காக, ரூ38,73,65000 ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் கோவை போக்குவரத்து கழகத்திற்கு ரூ4.3 கோடியும், கும்பகோணம் போக்குவரத்து கழகத்திற்கு ரூ8 கோடியும், மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ரூ9.6 கோடியும் ஒதுக்கீடு செய்து அரசானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“