Advertisment

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி: அமலுக்கு வந்தது மதுவிலக்கு திருத்த சட்டம்; மு.க ஸ்டாலின் புதிய அறிவிப்பு

தமிழக அரசு விஷ சாராயத்தை முழுமையாக ஒழிக்கும் வகையில், கொண்டு வந்த மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

author-image
WebDesk
New Update
CM MK Stalin x

முதல்வர் மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குறித்து 60-க்கு மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது தமிழகத்தில் மதுவிலக்கு திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisment

வட தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷ சாராயம் குடித்து 200-க்கு மேற்பட்டோர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 67 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டடுள்ள நிலையில், வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சியினர் பலரும் இது குறித்து கடுமையான நடவடிக்கை தேவை என்று தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இது குறித்து சட்டசபையில் கேள்வி பேச அனுமதி அளிக்காததால், எதிர்கட்சினர் வெளிநடப்பு செய்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு விஷ சாராயத்தை முழுமையாக ஒழிக்கும் வகையில், கொண்டு வந்த மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஜூன் 29ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி திருத்தப்பட்ட சட்ட மசோதாவின்படி, விஷசாராயம் விற்றால், ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டது. இது 2024 மதுவிலக்கு திருத்த சட்டம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுனர் அனுமதிக்காக அனுப்பபப்ட்ட நிலையில், தற்போது ஆளுனர் ஆர்.என்.ரவி உடனடியாக அனுமதி அளித்துள்ளார். அதன்படி மதுவிலக்கு திருத்த சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா ஆளுனர் அனுமதியுடன் அமலுக்கு வந்துள்ளது.

சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம், சாராயம் விற்க பயன்படுத்தப்படும் அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.ஜாமீனில் வெளிவர முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamilnadu Mk Stain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment