Advertisment

இனி மாதந்தோறும் ஆய்வு: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய ட்விஸ்ட்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள் என அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
magalir urimai thogai Tamil News

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக திட்டத்தில் பயன்பெற தகுதி வாய்ந்த மகளிருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் திட்டத்தின் அதிகாரிகள்  கள ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisment

இதன் பின் 1.6 கோடி பேர் அரசு வெளியிட்ட தகுதி பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. மேலும், விடுபட்ட தகுதி வாய்ந்த மகளிரும் கோட்டாட்சியர் மூலம் மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான பணம் 15-ம் தேதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரு நாள் முன்னதாக 14-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது, தமிழ்நாடு அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறுவோரின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும். 

வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். ஜி.எஸ்.டி., சொத்து வரி, தொழில்வரிகள் உள்ளிட்ட தரவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள். பயனாளிகள் மேல்முறையீடு செய்து விவரங்கள் பெற்று அதற்கேற்ப மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறந்தவர்களின் பெயரில் விண்ணப்பம், தவறான விண்ணப்பம் உள்ளிட்ட காரணங்களால் அரசு இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment