விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கான பயன்படுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும், விவசாய பயன்பாட்டில் இல்லதா மின் இணைப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மின்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விவசாயகத்தை ஊக்கு விக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில், இலவச மின்சார திட்டத்தில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 23.56 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இலவச மின் இணைப்பு செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், விவாசாயிகள், இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
மேலும் மின்மோட்டார் இயங்குவதற்கு வசதியாக இந்த மின் இணைப்பு மும்முனை இணைப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், விவசாயத்துறை பாதிக்கப்படாமல் இருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுதோறும் ரூ30,000 வீதம், வேளான்துறை மின்வாரியத்துறைக்கு கொடுத்து வருகிறது. அதே சமயம் இந்த இலவச மின் இணைப்புகள் குறித்து அவ்வப்போது புகார்களும் வந்து கொண்டு இருக்கிறது.
விவசாய பணிகளுக்காக இலவச மின் இணைப்பை பெற்றுவிட்டு, வேறு பணிகளுக்காக இந்த மின்சாரத்தை பயன்படுத்துவதாக புகார்கள் குவிந்து வருகிறது. விவசாய பணிகள் இல்லாமல் மற்ற பணிகளுக்கு மின் இணைப்புகளை பயன்படுத்துவதால், மின் வாரியத்திற்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் மின்வாரியத்தை இந்த சிக்கலில் இருந்து வெளியில் கொண்டு வரும் வகையில் தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி விவசாய நிலங்களை விவசாய நோக்கங்கள் அல்லாத பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலங்களில், விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மின் வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது, மின்வாரியம் தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“