கொரோனா நிவாரணப் பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டம்

Tamilnadu govt plan 13 home provisions to families for corona relief: கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது

தமிழகத்தில் அதிகரித்தும் வரும் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது. மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை.

இந்த நிலையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை இலவசமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை தமிழக அரசு வழங்கவுள்ளது.  கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, புளி, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் பொடி, குளியல் மற்றும் துணி சோப் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான வருகின்ற ஜூன் 3ஆம் தேதி முதல் நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிவாரணப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உணவுத்துறையும் கூட்டுறவுத்துறையும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

தமிழக அரசு ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியின் படி வழங்க உள்ளது. அதில் முதல் தவணையாக ரூ.2000 இந்த மாதம் வழங்கப்படும் எனவும், அடுத்த மாதம் அடுத்த தவணையாக ரூ.2000 வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu govt plan 13 home provisions free to families for corona relief

Next Story
உதயநிதிக்கு நண்பனும் மாப்பிள்ளையும் சேர்ந்து கொடுத்த அன்பு பரிசு; என்னனு பாருங்க..minister anbil mahesh gift to udhayanidhi, anbil mahesh, udhayanidhi, அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி, சபரீசன், அன்பில் மகேஷ் உதயநிதிக்கு அளித்த அன்பு பரிசு, sabreesan, stalin udhyanidhi, stalin karunanidhi, dmk
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express