தமிழகத்தில் 24 காவல்துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம், செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நேற்று (08.08.2024) ஐ.பி.எஸ் அதிகாரிகள் 56 காவல் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று (09.08.2024) மேலும் 24 காவல் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் கண்காணிப்பாளராக (Additional Superintendent of Police) இருந்த 24 காவல் அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளராக (Superintendent of Police) பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை நீதிமன்ற ஊழல் தடுப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த பி. மணிகண்டன், சென்னை மத்திய லஞ்ச ஒழிப்புப் பிரிவு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வி. ஜெயசந்திரன், கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை பெருநகர மாநகராட்சியின் மத்திய குற்றவியல் பிரிவு 1-ன் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.குத்தாலிங்கம் கண்காணிப்பாளராக பதவி உயர்வு செய்யப்பட்டு சென்னை தி.நகர் காவல் நிலைய துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.விஜயகுமார் திருநெல்வேலி கிழக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சி.ஐ.டி, சிறப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஜி.கார்த்திக்கேயன், சென்னை காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளராக நிய்மிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையின் சைபர் குற்றவியல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சி.சங்கு, அதே மாவட்டத்தில் போச்சாம்பள்ளி சிறப்பு காவல் படை பட்டாலியனின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி காவல் துறை சைபர் குற்றவியல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஏ.சி. கார்த்திக்கேயன், பதவி உயர்வு வழங்கப்பட்டு தாம்பரம் பள்ளிக்கரணை, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி காவல் துறை சைபர் குற்றவியல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வி.கார்த்திக், பழனி சிறப்பு காவல் படை பட்டாலியனின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஊழல் தடுப்பு மற்றும் விஜிலன்ஸ் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஏ.ஜி.இனிகோ திவ்யன்
மதுரை சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.அசோக் குமார், பதவி உயர்வு பெற்று கோயம்புத்தூர் போக்குவரத்து காவல் துறை துணை ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
ராமநாதபுரம் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.ஏ.அருண், மணிமுத்தாறு சிறப்பு காவல் படை பட்டாலியனின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த என்.தேவநாதன், சென்னை மேற்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கே.முத்துக்குமார், சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த ஈஸ்வரன், சென்னை சைபர் க்ரைம் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட க்ரைம் பிராஞ்ச் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கோமதி, சென்னை டி.ஜி.பி அலுவலக நிர்வாக பிரிவு கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு படை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த மீனாட்சி, சென்னை சைபர் அரங்க கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த வேல்முருகன், சேலம் தெற்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூரில் உயர்நீதிமன்ற வழக்குகள் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த முத்தமிழ், ஆவின் விஜிலன்ஸ் பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தாம்பரம் சைபர் க்ரைம் பிரிவு ஏடி.எஸ்.பி ஜரீனா பேகம், சென்னை சைபர் க்ரைம் பிரிவு துணை ஆணையராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சென்னை சி.ஐ.டி சிறப்பு பிரிவு ஏடி.எஸ்.பி ரமேஷ் கிருஷ்ணன் மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த கீதா, சேலம் காவல்துறை தலைமையிடத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் சைபர் க்ரைம் பிரிவு ஏடி.எஸ்.பி மகேஸ்வரி, தூத்துக்குடி காவலர் ஆட்சேர்ப்பு பள்ளி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை காவலர் ஆட்சேர்ப்பு பள்ளி ஏடி.எஸ்.பி ராஜேஸ்வரி, மதுரை காவல்துறை தலைமையிடத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
நாமக்கல் காவல்துறை தலைமையிடத்து ஏடி.எஸ்.பி கனகேஷ்வரி, சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.