அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வூதிய பங்களிப்பு குறித்து இணையத்தில் பார்த்துக்கொள்ளும் வகையில் தமிழக அரசு சார்பில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது,
தமிழகத்தில், கருவுல செயல்பாடுகள், நிதி மற்றும் மனிதவள மேலான்மை திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், மாதாந்திய ஊதிய பட்டியல் என அனைத்துமே கணிணிமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பணியாளர்கள் மட்டுமின்றி ஓய்வூதியம் பெறுபவர்களின் விபரங்களும், கணிணிமயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கடந்த 2003-ம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தின்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, வருகிறது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விபரங்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாக உள்ளது. இதன் மூலம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு விபரங்களை ஆன்லைனில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, செய்திக்குறிப்பில்,
"பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் தொகுக்கப்பட்டு 1.7.2024 அன்று காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது. cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“