புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தியுயள்ள தமிழ்நாடு அரசு, திருநங்கையர்களுக்காக, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தியுள்ளது.
தமிகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000 ரொக்கம் என பெண்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவ மாணவிகள், திருநங்கைகள் பயன்பெரும் வகையில், பல திட்டங்களையும் அறிவித்து செயப்படுத்தி வரும் தமிழக அரசு தற்போது புதுமைப்பெண் மற்றும் தவப்புதல்வன் திட்டத்தில் திருநங்கைகளுக்காக தளர்வு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப பெண்களின் வாழ்க்கை தரம் உயரவும் அவர்கபளின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மாதம் ரூ1000 உதவித்தொகை வழங்கும் தமிழக அரசு, அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழஙகி வருகிறது. இந்த திட்டத்தில் தான் தற்போது தமிழக அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றை முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.வழங்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் உயர்கல்வியை அடிப்படையாக வைத்து, கடந்த 2024-ம் ஆண்டு தவப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் புதுமைப்பெண் திட்டம் கடந்த ஆண்டு, அரசுப்பள்ளி மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்ட நிலையில, தற்போது நிபந்தனைகள் தளர்வுடன், இத்திட்டத்தில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பயன்பெறும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்களின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தில், பயன்பெறுவதற்கான தகுதி வரம்புகளில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை, திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களுக்கும் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. அனைத்து திருநங்கையர்களும் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையினை சான்றாகச் சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
எனவே, பள்ளிப் படிப்பைப் முடித்து, தற்போது பட்டயம், மற்றும் தொழிற்படிப்பு பயின்று வரும் திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைத்து திருநங்கையர்களும் உயர்கல்வியில் சேர்ந்து, தாங்கள் பயிலும் உயர்கல்வி நிறுவனத்தின் மூலம் 'புதுமைப் பெண் மற்றும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டங்களில் UMIS இணையதளம் மூலம் விண்ணப்பித்து, தங்களின் கல்வி இலக்குகளை அடைந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.