தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) மெரினாவில் பேனா வடிவிலான நினைவிடம் கட்டுவதற்கு மாநில அரசின் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒரு நாள் கழித்து, தமிழ்நாடு பொதுப்பணித் துறை (PWD) திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கத்தை ஆய்வு செய்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் நான்கு மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை இணைத்து உள்ளதாகக் கூறி ஒரு எதிர் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பிறகே பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: அனைத்து துறைகளின் ஒப்புதல் பெற்ற பிறகே மெரினாவில் பேனா சின்னம் அமைப்போம்: தமிழக அரசு பதில்
இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயம் முன் வந்தப்போது, தமிழக அரசு விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு பொதுப்பணித் துறை (PWD) திட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கத்தை ஆய்வு செய்வதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் நான்கு மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை இணைத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் எஸ் முத்தமிழ் அரசு கூறுகையில், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை மீன்பிடி நடவடிக்கை, கடல்வாழ் உயிரினங்கள், கப்பல்களின் இயக்கம், தூர்வாரப்பட்ட பொருட்களை அகற்றுதல் மற்றும் மெரினா ரோந்து ஆகியவற்றின் தாக்கத்தை ஆய்வு செய்யும்.
ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு முயற்சியான நகரமயமாக்கல், கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம், பேரிடர் மேலாண்மைத் திட்டம், விரிவான கூட்ட மேலாண்மை மற்றும் அவசரகால வெளியேற்றத் திட்டம் ஆகியவற்றுடன் இடர் மதிப்பீட்டு ஆய்வைக் கவனிக்கும்.
மேலும், ஐ.ஐ.டி மெட்ராஸின் கடல்சார் பொறியியல் துறை கட்டுமானத்தின் போது திட்டமிடப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் (மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும்), சென்னை துறைமுக அறக்கட்டளை மற்றும் இந்திய கடலோர காவல்படை உள்ளிட்ட சட்டப்பூர்வ அதிகார அமைப்புகளிடமிருந்து அனைத்து கட்டாய அனுமதிகளைப் பெற்ற பின்னரே திட்டம் தொடங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு மாநில அரசு உறுதியளித்துள்ளது, என்று கூறினார்.
பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் போன்ற மாநில அமைப்புகள் பேனா நினைவிடம் கட்டுவதற்கான திட்டங்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil