அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்க்கும் ஸ்டாலின்; டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ2000 கோடி ஒப்பந்தம்

டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ 2000 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்; அமெரிக்காவில் அடுத்தடுத்து முதலீடுகளை ஈர்த்து வரும் முதல்வர் ஸ்டாலின்

டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ 2000 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்; அமெரிக்காவில் அடுத்தடுத்து முதலீடுகளை ஈர்த்து வரும் முதல்வர் ஸ்டாலின்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CM Stalin signs MOU Trilliant

டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ 2000 கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமெரிக்காவில் டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆப்டம் இன்சைட் நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஜர் கானர், யுனைட்டட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவர் ஜான் மியாட் உள்ளிட்ட நிர்வாகிகளைச் சந்தித்து தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்

அதே போல் சிகாகோவில், 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

Advertisment
Advertisements
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நைக்கி நிறுவனத்தின் தலைமை வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் அழகிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளைச் சந்தித்து தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்

இந்நிலையில், அமெரிக்காவில் டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிகாகோவில் அற்புதமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டிரில்லியண்ட் நிறுவனத்துடன் ரூ.2 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டுக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இதன்மூலம் டிரில்லியண்ட் நிறுவனம் அதன் உற்பத்தி அலகு மற்றும் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழ்நாட்டில் நிறுவ உள்ளது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட் நிறுவனத்திற்கு நன்றி!

நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். சென்னையில் உற்பத்தி ஆலை விரிவாக்கம் குறித்து நைக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

திருச்சி, மதுரையில் ஆப்டம் (optum) நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆப்டம் நிறுவனம் ஏற்கெனவே சென்னையில் மருத்துவத்துறையில் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறது. இதனால் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Mk Stalin America

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: