ஐபிஎஸ்-கள் இடமாற்றம்: சிபிசிஐடி, விஜிலன்ஸ் பிரிவுகளுக்கு புதிய உயர் அதிகாரிகள் நியமனம்

Tamil nadu govt transfers IPS officers: சிபிசிஐடி, விஜிலென்ஸ், உளவுத் துறை பிரிவுகளுக்கு புதிய ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு

தமிழக அரசு 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, கடந்த சில நாட்களாக அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் பின்வருமாறு…

காவல் பயிற்சிக் கல்லூரியில் டிஜிபியாக இருந்த ஷாகில் அக்தர் சிபிசிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

சிறப்பு கூடுதல் டிஜிபியாக (நிர்வாகம்) இருந்த கந்தசாமி, லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு சிறப்பு செயல்பாட்டுக் குழு கூடுதல் டிஜிபியாக இருந்த ரவி சிறப்பு கூடுதல் டிஜிபியாக (நிர்வாகம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நுண்ணறிவு பிரிவு ஐ.ஜியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி நுண்ணறிவு பிரிவு(உள்நாட்டு பாதுகாப்பு) ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப பிரிவு டிஜிபியாக இருந்த ஆசியம்மாள் நுண்ணறிவு பிரிவு டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்பெசல் ஃபிராஞ்ச் சிஐடி எஸ்.பியாக அரவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர்.

உளவுத்துறை குற்றப்பிரிவின் எஸ்.பியாக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்ட காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வராக இருந்தவர்.

மயிலாப்பூர் துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவீன கட்டுப்பாட்டு அறையின் துணை ஆணையராக இருந்தவர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu govt transfer ips officers cbcid anti corruption

Next Story
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ; நிதிச் சுமையை தாங்குமா போக்குவரத்துக் கழகம்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express