தமிழகத்தில் நெல்லை, ஆவடி, சேலம், ஒசூர், கடலூர் மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஆவடி மாநகராட்சி ஆணையராக, சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரியாக இருந்த கந்தசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அரசு துணை செயலாளர் அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய டி.ஆர்.ஓ., துர்கா மூர்த்தி, வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி வாரிய நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அருங்காட்சியகங்களின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். பவர்ஃபின் நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவாணன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ், ஈரோடு கூடுதல் ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சாப்ரா, திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்த ஜோதி, கைவினைப்பொருட்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“