Advertisment

எம்.பி.சி சமூகங்கள் இடையே குழப்பம் உருவாக்க தமிழக அரசு முயற்சி: அன்புமணி குற்றச்சாட்டு

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு பி.ஆர்.ஓக்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
சச

வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு பி.ஆர்.ஓக்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தமிழக அரசு பி.ஆர்.ஓக்கள் மூலம் தவறான தகவலை அளித்துள்ளது. தவறான தகவல் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க சார்பில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து கொள்கிறேன். 

மேலும் இதுபோல தமிழக அரசு தொடர்ந்து செய்து கொண்டிர்ந்தால், அடுத்த 18 மாதத்தில் மீண்டும் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அதில் நாங்கள் யார் எனக் காண்பிக்கக்கூடிய காலம் வரும்” என்றார். 

கடந்த டிசம்பர் மாதம் தென் மாவட்டங்களில் பெய்த பெருவெள்ளத்தைச் சமாளிக்க மத்திய அரசு போதிய நிதி வழங்காததது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ”மத்திய அரசு இதுபோன்ற காலங்களில்  கண்டிப்பாக உதவி செய்யத்தான் வேண்டும். ஆனால் மாநில அரசு  கடந்த பட்ஜெட் நிதியாண்டில் ரூ. 18 லட்சம் கோடி தாக்கல் செய்தது. ஒரு ரூ. 2 ஆயிரம் கோடியை பேரிடர் காலத்தில் பயன்படுத்த வேண்டிய தொகைக்காக ஒதுக்கினால் தமிழக அரசே இதை சமாளிக்க முடியும். 

கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் உரிய கால அவகாசம் வழங்கி தேர்தல் தேதி உள்ளிட்டவற்றை அறிவிக்க வேண்டும். அதில் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் “ என்று தெரிவித்தார். 

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment