/tamil-ie/media/media_files/uploads/2022/12/Gutka.jpg)
கோவையில் 100 கிலோ குட்கா பொருட்கள் விற்பனைக்கு கொண்டு சென்ற வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் வடவள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் காவல்துறையினர் வீரகேரளம் முதல் வேடப்பட்டி ரோடு வீரகேரளம் பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக நான்கு சக்கர வாகனத்தில் சென்ற நபரை பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குயரம் என்பவரது மகன் கோபால்குமார் (24) என்பதும், இவர் தனது வானத்தில் குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 கிலோ எடையுள்ள குட்கா பொருட்ளுடன் சேர்த்து அவரின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.