Advertisment

விஜயபாஸ்கா், ரமணா மீதான குட்கா வழக்கு: ஆளுநர் ரவி அனுமதி இல்லை; 11-வது முறையாக அவசாசம் கோரிய சி.பி.ஐ

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கா், பி.வி.ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தராததால், 11வது முறையாக நீதிமன்றத்தில் வாய்தா கேட்டுள்ளது சி.பி.ஐ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai high court important order to DGP, madras high court, court order to avoid Two Finger test in sexual assault case, இருவிரல் பரிசோதனை, சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு, Two Finger test, Chennai high court order to avoid in sexual assault case

சென்னை ஐகோர்ட்

குட்கா முறைகேடு வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கா், பி.வி.ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தராததால், 11வது முறையாக நீதிமன்றத்தில் வாய்தா கோரிய சி.பி.ஐ.

Advertisment

தமிழ்நாட்டில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்றது தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கடந்த 2021ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.

இந்த சூழ்நிலையில், தமிழக காவல் துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால் சிபிஐ வழக்கில் உள்ள மேலும் சிலரிடம் விசாரணை நடத்தவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அனுமதி அளிக்கவில்லை. இதனையடுத்து இந்த வழக்கு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு இன்று (ஜூலை 17) விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு சிலருக்கு எதிராக விசாரணை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை எனவும், திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை அளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கபட்டது.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கா், பி.வி.ரமணா உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி தராததால், வாய்தா வழங்க வேண்டும் எனவும் சி.பி.ஐ கோரியது.

இதனை ஏற்ற நீதிபதி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக வழக்கின் விசாரணை 11-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aiadmk Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment