பாரம்பரியமாக கைத்தறியில் உருவாக்கப்படும் 5 விதமாக பட்டுபுடவைகளுக்கு புவிசார் குறியீடு வாங்க தமிழ்நாடு ஜவுளித்துறை முன்மொழிந்துள்ளது.
தமிழகத்தில், பாலிடெக்னிக் மற்றும் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் தொழில்நுட்ப டெக்ஸ்டைல் படிப்புகளை வழங்க ஜவுளித்துறை முன்மொழிந்துள்ளது. உயர்தர ஜவுளிகளை உற்பத்தி செய்ய திறமையான தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படிப்புகள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், ஜவுளி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் மையங்களின் ஆதரவுடன் அதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கைத்தறித் துறை, சின்னாளப்பட்டியில் இருந்து பட்டுப் புடவைகள் கூறைநாடு புடவைகள், நாகர்கோயில் வேட்டி, உறையூர் புடவைகள் மற்றும் குடியாத்தம் லுங்கிகள் என ஐந்து பாரம்பரிய கைத்தறிப் பொருட்களுக்கு புவியியல் குறியீடு பெறவும் முன்மொழிந்துள்ளது. இதற்காக ஜவுளித்துறை சார்பில் ரூ15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில், பட்ஜெட் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் ஜவுளித்துறையின் செயல்பாடு மேம்பட்டுள்ளது. “பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலைகள் வழக்கமாக, திருவிழா முடிந்ததும் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் விநியோகிக்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு நான்கு செட் சீருடை வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டில் முதல் முறையாக பள்ளிகள் திறக்கும் முன் 2 செட் பள்ளி சீருடைகளை வழங்கியுள்ளோம்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் காஞ்சிபுரம் போன்று மினி கைத்தறி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கோ-ஆப்டெக்ஸ், தற்போது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது என கூறிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் 18 ஷோரூம்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தற்போது, மாநிலத்தில் 105 மற்றும் மாநிலத்திற்கு வெளியே 49 உட்பட 154 ஷோரூம்கள் உள்ளன.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ரூ66 லட்சம் செலவில் விற்பனை மையம் அமைக்க ஜவுளித்துறை முன்வந்துள்ளது. 2021ல் இந்த அரசு பொறுப்பேற்றபோது, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்தது. ரூ7.60 கோடி இழப்பு ஏற்பட்டது. 2022-23ல், நிகர லாபம் ரூ9.45 கோடியாகவும், கடந்த ஆண்டு நிகர லாபம் ரூ11.57 கோடியாகவும் இருந்தது. இந்த ஆண்டு ரூ12 கோடியை தாண்டும் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.
கோ-ஆப்டெக்ஸின் விற்பனை 2020-21ல் ரூ171.90 லட்சத்தில் இருந்து 2023-24ல் ரூ214.50 லட்சமாக உயர்ந்துள்ளது. விளையாட்டு-தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டு ஆடைகள் தயாரிப்பதற்கான விரிவான ஆய்வை மேற்கொள்வதற்கு இத்துறை முன்மொழிந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“