தமிழகத்தில் செவ்வாய் கிழமை 33,875 ஆக இருந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு நேற்று 34,875 ஆக உயர்ந்துள்ளது. சென்னயில் மட்டும் புதிதாக 6,267 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரே நாளில் 365 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளனர். 23,863 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.53 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 16.9 லட்சமாகவும் உயிரிழப்புகள் 18,734 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. திங்கட்கிழமை 63,101பேர், செவ்வாய்க்கிழமை 50,091பேர் , புதன்கிழமை 45,755 பேர் என தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. மகாராஷ்ட்ராவில் 34,031 பேருக்கும்,கர்நாடகாவில் 34,281 பேருக்கும், கேரளாவில் 32,762 பேருக்கும் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலும் 200க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஒரு நாள் பாதிப்பு பதிவான பெரம்பலூரிலும் நேற்று 218 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 3,250 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.செங்கல்பட்டில் 2,275 பேருக்கும், திருவள்ளூரில் 1,778 பேருக்கும், திருப்பூரில் 1,573 பேருக்கும், திருச்சியில் 1,459 பேருக்கும், ஈரோட்டில் 1,362 பேருக்கும், மதுரையில் 1,156 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இறப்பு பதிவாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 46 பேரும், கன்னியாகுமரியில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். திருவள்ளூரில் 18 பேரும், காஞ்சிபுரத்தில் 8 பேரும், சென்னை மண்டலத்தில் 163 பேர் உயிரிழந்துள்ளனர். கோயம்புத்தூரில் 17 பேரும், மதுரயில் 14 பேரும், திருச்சியில் 13 பேரும் உயிரிழந்துள்ளனர்.