கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,இன்று அதிகாலையில் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 கிலோ மீட்டர் தூரம் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது திடீரென சூலூர் அரசு மருத்துவமனைக்கு அரசு வருகை தந்த அமைச்சர், மருத்துவமனையின் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
புறநோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவை பார்வையிட்டு, நோயாளிகளிடம் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கலந்துரையாடி, மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக எழுந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஆய்வுக்கு முன்னர், அமைச்சர் சூலூர் பகுதியில் உள்ள பிரபலமான சாலையோர தள்ளுவண்டி கடைக்கு சென்று கூழ் குடித்தார். அப்போது பொதுமக்களுடன் இயல்பாக பேசிய அவர், கடைக்காரரிடம் கூழ் தயாரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். தினமும் காலை வேளையில் சிறுதானியங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கூழ் குடித்து வந்தால் மூட்டு வலி, சர்க்கரை நோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும் என கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
மேலும் தினமும் கூழ் குடிக்குமாறு கடைக்காரர் அமைச்சருக்கும் அட்வைஸ் கொடுத்த வீடியோவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“