ஓபிஎஸ் பாராட்டுகிறார்… இபிஎஸ் ஏன் திட்டுகிறார்? மா.சுப்பிரமணியன் கேள்வி

Tamilnadu Covid Update : தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு அதிமுக முன்னாள் அமை்ச்சர்கள் பாராட்டு தெரிவித்து வருவதாக மருத்தவத்துறை அமைச்சர் கூறியுளளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு திவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதில் பலி எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வரும் நிலையில், கருப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என் பல நோய் தொற்றுகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்தவமனையில் கருப்பு பூஞ்சைக்கான சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்த மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழகத்தின் மிகச்சிறந்த மருத்துவ வல்லூனர் குழு ஒன்று இந்த நோயின் தன்மை குறித்து ஆராயவதற்கு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.  பல்துறைகளை சேர்ந்த மருத்தவர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும இந்த தொற்றுநோயிகன் தன்மை மற்றும் மருந்து தேவைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை  அளிக்க அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் ஓமந்தூரார் மருத்தவமனை சிறப்பான பணியை மேற்கொண்ட வருகிறது.

இந்த மருத்துவமனையில் ஏற்கனவே 900 படுக்கை வசதிகள் உள்ள நிலையில், தற்போது மேலும் 120 படுக்கைகள் வெண்டிடேடா வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் முதல் அலையை விட 2-வது அலையில் கிராமப்புறங்கள் அதிகம் பரிக்க்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழக முதல்வர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.  ஏற்னவே கொரோனா  தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் பல மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து தற்போது தொற்று போதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.

மேலும் தமிழக அரசின் துரித நடவடிக்கையால் கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள முதல்வர், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியும் தீவிரம் காட்டி வருகிறார். இந்தியாவிலேயே ஆகஸிஜன் வசதிகளுடன கூடிய படுக்கை வசதிகள் அதிகம் உள்ள மாநிலம் திமிழ்நாடு. அதேபோல் தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை அதிகமாக செய்யப்படுகிறது.  தமிழகம் முழுவதும் 276 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், கொரோனா தொற்று முதல் அலையிலேயே முழுமையாக கட்டப்படுத்தப்படவில்லை என்று கூறியதும், இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தொற்று முதல் அலையை உலகளவில் எந்த நாட்டிலும் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என்றும், அதிமுக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வந்த்து என்றும் கூறியிருந்தார்.

தற்போது இதற்கு பதில் அளித்துள்ள மருத்தவத்துறை அமைச்சர், அதிமுகவில் உள்ள ஒபிஎஸ், உதயக்குமார், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஆகியோர் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதல்வரின கொரோனாதடுப்பு செயல்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதிமுகவின் அனைத்து முன்னாள் அமைச்சர்களும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுளார். கடந்த 7-ந் தேதி வரை அவர்தான் தமிழக முதலமைச்சர், அவர் ஆட்சியில் இருந்து கடைசி நாள் தமிழகத்தில் ஆக்ஸிஜன் இருப்பு 230 மெட்ரிக்டனாக இருந்தது. ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் 650 மெட்ரிக்டன் ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருந்து ஆக்ஸிஜனை வரவழைத்து இரவு பகல் பாராமல், மத்திய அமைச்சர்களுடன் தொடர்ந்து பேசி தேவைகளை கேட்டு பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்தும் கூட ஆக்ஸிஜன் குறைவினால் தான் உயீர்பலி ஏற்பட்டுள்ளதாக கூறியது ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் முதல்வர் காபந்து முதல்வராக இருந்த கடைசி நாள் தமிழகத்தில் தொற்று பாதிப்பு 27 ஆயிரமாக இருந்தது. தற்போது 33 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் இருந்து அவர் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்பதை நீங்களே புரிகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu health minister say about former cm palanisamy for covid death

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com