எச்சில் தொடாதீங்க… ஊதாதீங்க..! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் முக்கிய எச்சரிக்கை

Health Secretary Radhakrishnan Tmil News: கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் பை உறைகளை எச்சில் தொட்டு எடுக்கவோ, வாயால் ஊதவோ வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோன தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஒர சில தளர்வுகளுடன் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இநத தளர்வுகளில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் உணவு பொருட்கள் மற்றும் இறைச்சி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கடைகளில் பொருட்கள் வாங்கும்போது  விற்பனையாளர்கள் கொடுக்கும் பை உறைகளை எச்சில் தொட்டு எடுக்கவோ, வாயால் ஊதவோ கூடாது என்று தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் அவ்வப்போது மேலும சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கில், உணவுக் கூடங்களில் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டு பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் உணவகங்கள் உட்பட பல கடைகளில், பை உறைகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ளதால், மளிகை கடைகளும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் உறைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் உறைகளை எடுக்கும் போது கடை ஊழியர்கள் கையில் எச்சில் தொட்டோ உறைகளை வாயால் ஊதுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது கொரோனா தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும். என்பதால், இதனைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

உயர் நீதிமன்றம் உத்தரவு சமீபத்தில் இது தொடர்பான பொது நல வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடைகளின் ஊழியர்கள் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது உறைகளை கையால் எச்சில் தொட்டு பிரித்தல், வாயால் ஊதுதல் போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது.

இது குறித்து கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தவும் அவர்கள் அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவதை தடுக்க  போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது. உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பேக்கரி பொருட்கள் ஆகியவறை பார்சல் செய்யும்போது  ஊழியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி, அத்தகைய செயல்பாடுகளில் ஊழியர்கள் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu health secretary radhakrishnan release covid awareness for packages

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express