ஐயப்பன் குறித்து சர்ச்சை பாடல்: கோவையில் கானா பாடகி இசைவாணி மீது இந்து முன்னணி புகார்!

கடவுள் ஐயப்பன் குறித்து சர்ச்சையாக பாடல் பாடிய இசை வாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி சார்பில் கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடவுள் ஐயப்பன் குறித்து சர்ச்சையாக பாடல் பாடிய இசை வாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி சார்பில் கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Isai Vaani Compl

ஐயம் சாரி ஐயப்பா ("Iam sorry iyyappa") பாடல் பாடிய கான பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி அமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டது.

Advertisment

இது குறித்து பேசிய இந்து முன்னணி பொறுப்பாளர் கிருஷ்ணன், 
ஐயம் சாரி ஐயப்பா (I Am Sorry iyyappa) என்று சர்ச்சைக்குரிய வகையில் இசைவாணி பாடல் பாடியது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் கோடிக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் மனதை புண்படுத்துகிறது. இசைவாணி கிறிஸ்தவர் என்பதால் ஐயப்பனை இழிவுபடுத்தி பாட்டு பாடியுள்ளார். பெண்கள் ஏன் கோவிலுக்கு வரக்கூடாது என என்று கிண்டலாக இது இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பாடியுள்ளார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல் ஆணையர் மற்றும் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. கஸ்தூரி மீது நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் கைது செய்கிறார்கள். ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் பாடியதற்கு கைது செய்யாமல் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் இசைவாணி மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்து மதத்தையும் கலாச்சாரத்தை சீரழிக்க வருவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: