கோயில் நிலம் ஆக்கிரமித்தால் கிரிமினல் நடவடிக்கை: புகார் கொடுப்பது எப்படி?

Tamilnadu News Update : கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Tamilnadu News Update : தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை, இதற்கு தேவையான ஆவணங்களை அளித்து கோயில் நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது

தமிழத்தில் உள்ள கோயில்களை பராமரிப்பதற்காக தொடங்கப்பட்டது இந்து சமய அறநிலையத்துறை.. இந்த துறையின் கீழ் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்கள் உள்ள நிலையில், இந்த கோயிலகளுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்காக ஏக்கர் நிலங்கள் உள்ளன. மேலும் காலி இடங்கள், கட்டிடங்கள் கடைகள் என கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் பல தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகினறனர்.  

மேலும் பல பகுதகளில் கோயில் நிலங்களில் உள்ள கட்டிடங்களில் கடைகள் மற்றும் பல வணிக நிறுவனங்களை வைத்துககொண்டு வாடகை கொடுககாமல் சொந்த இடம்போல் அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது இதனை கருத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் நல ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆணையர் மட்டுமல்லலாது அனை்து சார்நிலை அலுவலர்களும் புகார் அளிக்கலாம் என்று இந்து அறைநிலையத்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில். நிறுவனங்களுக்கு சொந்தமா சொந்துக்களில், சடடப்படியான உரிமம், இல்லாமல் ஆக்கரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது ஆணையரின் எழுத்து மூலமன புகாரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள சட்டப்பிரிவு 79 (b) யில் வழி செயயப்பட்டுள்ளது. இதில ஒவ்வொரு நிகழ்விலும், ஆணையர் மட்டுமே புகார்  செய்வது என்பது இயலாது என்பதால் 1973 இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம் குறிப்பிட்டுள்ளபடி குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்த ஒரு நபரும் ஆக்கிரமிப்பாளர் மீது எழுத்து மூலமான புகாரினை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கு அளிக்கும் வகையில் சட்டப்பிரியு 79 (b) –ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பார்வை குறிப்பு 2-ல் காணும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு அதன் நகர் பார்வை குறிப்பு 3-ல காணும் குறிப்பில் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது

எனவே அந்நிறுவனங்களுக்கு சொந்தமான சொந்த்துக்களில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் எதுவுமின்றியும் உிய வாடகையினை செலுத்தமாலும்,ஆக்கிரமிப்ப செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடை காவல் நிலையத்தில் முறையாக புகார் மனு அளித்திட சம்பந்தப்பட்ட அந்நிறுவனங்களின் அறங்காவலர்கள் அல்லது தக்கார் அல்லது செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்டுகிறது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி குற்ற நிகழ்வு குறி்து அறிந்த எந்த ஒரு நபரும் புகார் அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவெ அந்நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை சடடப்படியான உரிமையின்றி அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து திருக்கோயில் நிர்வாகிககள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு விரைந்து ஆக்கிரமிப்பு தாரர்ள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது மேலும் ஆக்கிரமிப்பு தாரர்களுக்கெதிராக தனிநபரால் காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் மனு மீதான விசாரணைக்கு தெவையான ஆவணங்களையும், முழுமையான ஒத்துழைப்பைம் காவல்துறைக்கு வழங்கிட வேண்டுமென திருக்கோயில் நிர்வாகிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu hindu religious charitable warm criminal action for temple asset aggression

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com