சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி (HMPV) நோய் பாதிப்பு உறுதி செயய்ப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைகள் தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், இந்தியாவில் எச்.எம்.பி.வி (HMPV) நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பாதிப்பு 5 ஆண்டுகளை கடந்துள்ளது. முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்றாலும் கூட, கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் நிலையில், தற்போது புதிதாக, எச்.எம்.பி.வி என்ற வைரஸ் பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது. ஹியூமன் மெட்டாநியுமோ வைரஸ் (HMPV)என்று வைரஸ் பாதிப்புகள் சீனாவை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
தற்போது இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தனது எண்ணிக்கையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பாதிப்ப கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ள நிலையில், தற்போது, சென்னையில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சளி, இருமல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடக மற்றும் தமிழகத்தில் தலா 2 மற்றும் குஜராத்தில் 1 என இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உடலில் சளி,இருமல், புளு காய்ச்சல், தொண்டையில் எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், இது எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூச்சிரைப்பு, சுவாசிப்பதில் கோளாறு போன்ற இருந்தாலும், இந்த வைரல் பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக கூறகப்படுகிறது.
இந்த வைரஸ் பாதிப்பு, முற்றும் பட்சத்தில் நிமோனியா காய்ச்சல், ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்படும். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் இந்த வைரசால், பதற்றம் அடையத் தேவையில்லை என்றும், 'இது புதிய வகை உருமாறிய தொற்று இல்லை. ஏற்கனவே இருக்கும் இன்புளூயன்ஸா பாதிப்பு தான்' என்றும் தமிழக சுகாதாரத்துறை அளித்துள்ள விளக்கத்தில், தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“