Advertisment

விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச் சாராய மரணம்: சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றம்

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவேறு சம்பவங்களில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Sylendara babu

தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

விழுப்புரம் அருகே விஷசாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்குகள்  அனைத்தும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற முதல்வரின் அறிவிப்பை அடுத்து வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்,

Advertisment

இது தொடர்பாக காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஷச்சாராயம் அருந்தி (13.05.2023 முதல் 15.05.2023 வரை) 13 நபர்கள் இறந்துபோன சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய குற்ற எண் 225/2023 ச.பி. 120(b) 328, 304(i) IPC r/w 7, 4(15)4(1)(Axi) TNP Act 1987இன்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அதோடு செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவேறு சம்பவங்களில் பெருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் விஷச்சாராயம் அருந்தி 13.05.2023 அன்று இறந்துபோன சம்பவம் தொடர்பாக சித்தாமூர் காவல் நிலைய குற்ற எண் 137/2023  ச/பி 174 Cr.P.C @ 4(1A) TNP Act and 284328.304 ii) IPC மற்றும் குற்ற எண் 138-2023, ச/பி 174 CrPC & 41A) TNP Act and 284328304(ii) IPC இன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.

15.05.2023 அன்று விழுப்புரம் முண்டியம்பக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த வழக்குகள் குற்றப்பிரிவு குற்றபுலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்தார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க 16:05.2023 இவ்வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment