Advertisment

குடந்தை டூ டெல்லி : முன்னாள் ராணுவ தளபதி பிபின் ராவத் திருவுருவசிலைக்கு பெரும் வரவேற்பு

கும்பகோணம் ராமசாமி சிற்ப கலைக்கூடத்தில், 150 கிலோவில், இரண்டரை அடி அகலம், 4 அடி உயரத்தில் மார்பளவு சிலையை சிற்பி ராம்குமார், ஆறு மாதங்களாக வடிவமைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
குடந்தை டூ டெல்லி : முன்னாள் ராணுவ தளபதி பிபின் ராவத் திருவுருவசிலைக்கு பெரும் வரவேற்பு

க.சண்முகவடிவேல்

Advertisment

இந்திய ராணுவத்தின் முப்படை தளபதியான இருந்த பிபின்ராவத் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவர் இந்திய ராணுவத்திற்கு ஆற்றிய பணிகளையும் அவரது நினைவை போற்றும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் பவுண்டேஷன் சார்பில் 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் ஆனா அவரது மார்பளவு திருவுருவசச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ஆகும்.

கும்பகோணம் ராமசாமி சிற்ப கலைக்கூடத்தில், 150 கிலோவில், இரண்டரை அடி அகலம், 4 அடி உயரத்தில் மார்பளவு சிலையை சிற்பி ராம்குமார், ஆறு மாதங்களாக வடிவமைத்தார். தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில், ஜெனரல் பிபின் ராவத் திருவுருவச்சிலை வழியனுப்பு நிகழ்வு கடந்த  27.11.22 ஞாயிற்றுக்கிழமை காலை கும்பேஸ்வரர்  கோவில் வடக்கு வீதியில் நடைபெற்றது.

பின்னர் இந்த சிலை கடலூர், புதுச்சேரி கொண்டு செல்லப்பட்டு, புதுச்சேரி - புதுடில்லி விரைவு ரயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணம் ஆகி நேற்று டெல்லி ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

நீலகிரியில் வீரமரணம் எய்திய இந்திய தேசிய இராணுவத்தின் முதன்மைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்  ஐம்பொன் மார்பு அளவு சிலையை உருவாக்க காரணமாக இருந்த குழுவினரை இரயில் நிலைய முக்கிய பிரமுகர்கள், நுழைவுப் பகுதியில் உள்ள அரங்கில், இரயில் நிலைய அதிகாரிகள் பரத்வாஜ் சதீஷ், OP.சர்மா ஆகியோர் சிலை நிர்மாண குழுவினரை வரவேற்று ஜெனரல், பிபின் ராவத் திருவுருவச்சிலைக்கு, மரியாதை செலுத்தினர்.

பின்னர் டில்லி சங்கர் விஹாரில் உள்ள கூர்க ரைபிள்ஸ் , படைப்பிரிவின் தலைமையகத்தில், லெப்டினன்ட் கர்னல், சச்சின் கம்போஜ் மற்றும், இராணுவ குழுவினர், ஜெனரல் பிபின் ராவத் திருவுருவச்சிலையை, முறைப்படி பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில், சிலை நிர்மாணக் குழு தலைவர் மில்ட்ரி பாபு , ஆலோசகரும் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளருமான வி.சத்தியநாராயணன், துணைத்தலைவர் சுரேஷ் கண்ணன், கேப்டன் செல்வராஜ், சார் ஓஷியன் நிறுவன இயக்குனர் இளையராஜா, தென்னக இரயில்வே மஸ்தூர் யூனியன், திருச்சி உதவி கோட்ட, செயலாளர் R.K.குமார் கடலூர் சாரல் சங்கர், சிதம்பரம் ரங்காசேட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இராணுவத்தினரின் அர்ப்பணிப்பு  சேவைகளை ஊக்குவிக்கும் வகையிலும், நன்றி தெரிவிக்கும் வகையிலும், வருகின்ற 08.12.22  அன்று நடைபெற உள்ள ஜெனரல் பிபின் ராவத்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டும்  தமிழக மக்கள் சார்பில் திருவுருவச்சிலை டெல்லியில் நிறுவப்பட உள்ளது என்பதும், டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் வைக்க உள்ள முன்னாள் ராணுவ வீரர் தகவல், பிபின் ராவத் சிலையை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bipin Rawat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment