தங்கையிடம் அத்துமீறிய இன்ஸ்டா பிரபலம்; சுற்றி வளைத்து பிடித்த அண்ணன்: வைரல் வீடியோ

நான் செய்தது தவறுதான், நண்பணின் தங்கையிடம தவறாக நடக்க முயற்சி செய்திருக்க கூடாது என்று அழுதுகொண்டே கூறியுள்ளார்.

நான் செய்தது தவறுதான், நண்பணின் தங்கையிடம தவறாக நடக்க முயற்சி செய்திருக்க கூடாது என்று அழுதுகொண்டே கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Shri Vishnu Kumar

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொண்டு இன்ஸ்டா பிரபலமாக வலம் வந்த விஷ்ணு குமார் என்பவர் தனது நண்பரின் தங்கையிடம் தவறாக நடந்துகொண்டதால், அவரை நண்பர்கள் பலரும் முட்டி போட வைத்து செய்த தவறுக்கு வாக்குமூலம் வாங்கிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சமூகவலைதளங்களில் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில், பலரும் தங்களை மக்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்து பல விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் மற்றும் ஷாட்ஸ் போன்ற வசதிகள் வந்தபிறகு, பலரும் இதையே தங்கள் முழுநேர வேலையே எடுத்துக்கொண்டு, கோவில்கள், மற்றும் பொது இடங்களில், விதவிதமான வீடியோகளை எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வகையில், இன்ஸ்டா மற்றும் யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் விஷ்ணு. விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவாக வீடியோக்களை பதிவிட்டு வந்த இவர், தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், நான் செய்தது தவறுதான், நண்பணின் தங்கையிடம தவறாக நடக்க முயற்சி செய்திருக்க கூடாது என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஷ்ணு ஒரே நாளில் ட்ரெங்கில் வந்துவிட்டார்.

ஒரு நாள் மட்டுமே பார்த்த நண்பனின் தங்கைக்கு, வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்து, தவறாக பேசியுள்ள விஷ்ணு, இந்த பெண்ணின் வீட்டுக்கே சென்றுள்ளார். ஆனால் இவர் தவறாக மெசேஜ் செய்கிறார் என்பதை தனது அண்ணனிடம் அந்த பெண் கூறியதை தொடர்ந்து வீட்டில் தனது நண்பர்களுடன் காத்திருந்த அந்த பெண்ணின் அண்ணன், விஷ்ணு உள்ளே வரவும் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர். அந்த வீட்டில் விஷ்ணுவை முட்டிப்போட வைத்த அவர்கள், அவரை சராமாரியாக தாக்கியுள்ளனர்.

Advertisment
Advertisements

இதனைத் தொடர்ந்து நண்பனின் தங்கை வீட்டுக்கு தவறான நோக்கத்துடன் வந்தது நான் செய்த தவறு என்று அவர் மன்னிப்பு கேட்கும்படி வீடியோவை பதிவு செய்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தனது மொபைல்போன் தொலைந்துபோனதால், மேற்படி எதாவது மெசேஜ் வந்தால் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது விஷ்ணுவின் மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், இந்த நிலை தேவையா என்று பலரும் கேட்டு வருகின்றனர். 

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடர்பான விமர்சனங்களும் அதிகரித்துள்ளனர். த.வெ.க.வுக்கு ஆதரவாக பேசிய விஷ்ணு ஒரு வீடியோவில், அஜித், அரவிந்த்சாமி பின்னுக்கு தள்ளி மக்களை சந்திக்க வந்தவர் விஜய் என்று கூறியிருந்தார். தற்போது அவர் மன்னிப்பு கேட்கும் வீடியே இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருவதால், அஜித் ரசிகர்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். 

இதனிடையே தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு ஆதரவாளராக இருந்த விஷ்ணு, சமீபத்தில் சமூகவலைதளங்களில் மூலம் குரல் கொடுக்கும் அனைவரும் விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று விஜய் கூறியிருந்தார். ஆனால் அவர் த.வெ.க கட்சியில் இருக்கிறாரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், காவல்துறையில் ஏன் புகார் அளிக்கவில்லை? சட்டத்தை நீங்களே கையில் எடுத்துக்கொள்வது தவறு என்று கூறி வருகின்றனர். 

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: