தமிழ்நாடு தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1997 -ன் திருத்தத்தை அறிமுகப்படுத்தும் மசோதா உட்பட புதன்கிழமை நான்கு மசோதாக்களை தமிழக அரசு தாக்கல் செய்தது.
நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1997 -ன் திருத்தத்தை அறிமுகப்படுத்தும் மசோதாவை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த திருத்தச் சட்டமானது நிலம் கையகப்படுத்தும் அதிகாரத்தை நில நிர்வாக ஆணையரிடம் ஒப்படைக்க வழிவகை செய்கிறது. இது நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்த உதவும் என கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவதற்கான, நிர்வாக அனுமதி மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நில நிர்வாக ஆணையரிடம் ஒப்படைக்கப் படுகிறது.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிமுகப்படுத்திய மசோதா தமிழ்நாடு வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் (ஒழுங்குமுறை) சட்டம், 1987 ல் திருத்தம் செய்வதற்காக கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், 24 மார்க்கெட்டிங் கமிட்டிகளின் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நவம்பர் 30 முதல் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் 2020 நவம்பரில் முடிவடையவிருந்தது, முந்தைய அதிமுக அரசு 14 குழுக்களுக்கும் பின்னர் 10 குழுக்களின் மற்றொரு தொகுப்பிற்கும் உறுப்பினர்களை பரிந்துரைத்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த மார்க்கெட்டிங் கமிட்டிகளில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை வாபஸ் பெற்று கமிட்டிகளுக்கான சிறப்பு அதிகாரிகளை நியமித்தது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம், 2016 ல் திருத்தம் செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இது, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு (வன்னியகுல க்ஷத்ரியர்) 10.5%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட சமூகங்கள் 7% மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு 2.5% ஆகியவற்றுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான இடஒதுக்கீடான 20% க்குள் நடைமுறைப்படுத்த வழிவகை செய்கிறது.
தமிழ் அரசுப் பணியாளர்கள் (சேவை நிபந்தனைகள்) சட்டம், 2016 -ல் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது, துறைத் தேர்வுகள் சீர்திருத்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ் இரண்டாம் மொழித் தேர்வின் பாடத்திட்டம் அல்லது தேர்வு முறையை திருத்த 2017 -ல் வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கிறது. மசோதாவின் கீழ், விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்களையும், நேர்முகத்தேர்வில் 60 மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.