பல மடங்கு வளர்ச்சி பெறும் துறையாக மாற போகும் விண்வெளி துறை..!
உலக அளவிலான சவால்களை சந்திக்க புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, அறிவியல் தொழில் நுட்பம் தொடர்பான மாணவர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள க்ரீன் பீல்டு தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வில் இஸ்ரோ விஞ்ஞானி சந்திராயன் 3"திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடையே உரையாடினார்.
அப்போது பேசிய அவர் கூறுகையில், விண்வெளி சார்ந்த அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த பொறியியல் துறை மிகப்பெரிய வளர்ச்சி மாற்றத்தை காண உள்ளது. எனவே கல்வி பயிலும் மாணவர்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் ஒருங்கிணைந்து சந்திராயன் விண்கலம் நிலவில் இறங்குவதை போல மேடையில் தத்ரூபமாக வடிவமைத்து அசத்தினர்.
/indian-express-tamil/media/media_files/2025/02/08/coimbafd2.jpg)
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், இஸ்ரோ சார்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் இருக்கிறது. செயற்கைக்கோள், விண்வெளி சார்ந்த துறைகள் வரும் காலங்களில் பலமடங்கு வளர்ச்சி காண உள்ளது. உலக அளவில் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளில் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருப்பதால் இந்திய மாணவர்கள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த வர்கள் விண்வெளி தொடர்பான துறைகளை தேர்வு செய்து அதில் பிறருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் விதமாக நிறுவனங்களை உருவாக்கி தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என கேட்டு கொண்டார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்