Advertisment

கருணாநிதி மருமகன் முரசொலி செல்வம் மறைவு: ஸ்டாலின்- பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி

மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி மாறனுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Murasoli Selvam

திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் நிர்வாக இயக்குனராக இருந்த முரசொலி செல்வம், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (அக்டோபர் 10) மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சகோதரியான சண்முக சுந்தராம்பாள் மகன் முரசொலி செல்வம். கருணாநிதியின் மகள் செல்வி என்பரை திருமணம் செய்துகொண்ட இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் திரைத்துறை பிரபலங்களான பார்த்திபன், சத்யராஜ், நடிகர் விஜய் மனைவி, நடிகர், பிரஷாந்த், சரத்குமார், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முரசொலி செல்வம் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்ல போகிறேன். சிறுவயது முதலே எனக்கு அண்ணாகவும், வழியகாட்டியாக, இயக்க பணிகளில் ஆலோசனை வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என்று பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எங்களைத் தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க செல்வம் மாமா என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதேபோல் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது பதிவில், சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட ஜனநாயக விரோதக் கூண்டில் நீங்கள் நெஞ்சுரத்துடன் ஏறிய போது பெருமை அடைந்தோம். தற்போது இந்தக் கூண்டில் அடைக்கப்பட்டு உள்ளீர்கள்! நாங்கள் என்ன செய்வது மாமா என்று கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், திரு முரசொலி செல்வம் அவர்கள் என்னுடைய நீண்ட கால நண்பர். அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது பதிவில், என்னுடைய இனிய நண்பர் திரு. முரசொலி செல்வம் மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவர். திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு மரியாதை அளிக்கிற நல்ல மனிதர். திரு. முரசொலி செல்வம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் எம்.பியும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, வீடியோகாலில் கதறி அழுத பதிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளனர். அதேபோல், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரை முருகன் ஆகியோர் முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுத காட்சிகள் வெளியாகியுள்ளது.

முரசொலி செல்வரம் மறைவை அறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். இந்த பேரிழப்பை என் குடும்பத்தின் இழப்பாகவே பார்க்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment