ராமர் கோவில் திறப்பு தொடர்பான நிகழ்ச்சிகளை தமிழகத்தில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், நாகர்கோவில் பகுதியில் எல்.இ.டி திரை வைத்து ஒளிபரப்ப காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் எல்.இ.டி திரை வைத்து ஒளிபரப்ப தங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை என்று காஞ்சிபுரம் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில், உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கோவில், திறப்பு விழா (ஜனவரி 22) இன்று நடைபெறுகிறது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாக சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகள் ஏற்றுமாறு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இதனிடையே இந்தியா முழுவதும், ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டங்கள், இருந்தாலும், தமிழகத்தில் ராமர் கோவில் திறப்பு விழா குறித்து எதிர்ப்புகள் இருந்து வருகிறது. ராமர் கோவில் திறப்பு நாளான இன்று, தமிழகத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ராமர் பெயரில் அன்னதானம் வழங்க முடியாது என்று தமிழக அரசு மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
குறிப்பாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ராமர் கோவில் தொடர்பான சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், ராமர் பெயரில அன்னதானம் வழங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டடிருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாகர்கோவில் பகுதியில் எல்.இ.டி திரை வைத்து ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சிளை ஒளிபரப்ப போலீசார் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டிருந்தார்.
This is a private temple in #Kanchipuram where Indian Finance Minister Smt.@nsitharaman is going to watch Live #Ayodhya #RamMandir #PranaPratishta !
— Dr.SG Suryah (@SuryahSG) January 22, 2024
But right now Tamil Nadu Police has entered the premises & is removing the LED screens.
What a joke this is CM Mr.@mkstalin ? pic.twitter.com/hyF9lpSZmm
இதனிடையே, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ராமர் கோவில் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப எல்.இ.டி திரை வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன் அனுமதி இல்லாமல் பொது இடத்தில் இவ்வாறு செய்வது தவறானது என்று கூறி காவல்துறையினர் அவற்றை அகற்றியுள்ளனர். காவல்துறையின் இந்த செயல் சர்ச்சையாக வெடித்த நிலையில், ராமர் கோவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய அனுமதி மறுக்கப்படுவது காவல்துறை அதிகார மீறல் என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ராமர் கோவில் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, அனுமதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், எல்.இ.டி திரை வைக்க யாரும் அனுமதி கோரவில்லை. பஜனை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறுவதாக கூறி அனுமதி கோரப்பட்டிருந்தது. பஜனை நிகழ்ச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.