scorecardresearch

பகை உணர்வை தூண்டும் பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரம் : கன்னியாகுமரியில் தி.மு.க பரபரப்பு புகார்.

இந்து அறநிலையத்துறை சார்பில் மாசிக்கொடை 10_நாட்களும் இந்து சமய மாநாட்டை சிறப்பாக நடத்த இருப்பதாக கூறப்படுகிறது..

பகை உணர்வை தூண்டும் பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரம் : கன்னியாகுமரியில் தி.மு.க பரபரப்பு புகார்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில்.சமய மாநாடு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பாக நடத்த இருப்பதாக கடந்த (பிப்_12) அன்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரின் அறிக்கை மூலம் குமரி மாவட்ட மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இந்துவ ஹிந்து சேவா சங்கம் என்ற தனி அமைப்பு.மண்டைக்காடு பகவதியம்மன் பெயரில் ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் நன்கொடை வசூலித்து நடத்தி வந்ததை தடுக்கவும். அத்தகைய போலி வசூலில் ஈடுபட்டு கமிஷன் பெற்று வந்த கூட்டத்தை தடுக்கவும் இந்த ஆண்டு முதல் இந்து அறநிலையத்துறை சார்பில் மாசிக்கொடை 10_நாட்களும் இந்து சமய மாநாட்டை சிறப்பாக நடந்தாக அறிவிக்கப்பட்டது

இதனிடையே குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பாஜக சார்பில் சமுக வலைத்தளங்கள் மற்றும் சுவர் ஓட்டிகள் மூலமாக இந்த ஆண்டு இந்து சமய மாநாடு நடைபெற அரசு தடை விதித்துள்ளது என்ற பொய்யை பரப்பி வருகிறது. இதன் காரணமாக சமுகத்தின் அமைதியை கெடுத்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் மாவட்டத்தின் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூராக சாலை ஓரங்களில் கூடி போராட்டம் நடத்துவதின் நோக்கமாக உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழும் அனைத்து சமுக மக்களின் மத்தியில் பகை உணர்வை ஏற்படுத்தும் செயலை திட்டமிட்டு செய்துவரும்.குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் மற்றும் அவருடன் உள்ள சிலர் மீது வழக்கு பதிவு செய்து பொது சமுகத்தின் நலம் கருதி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளரிடம் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி.ஸீடிபன் ஆகியோருடன் பல்வேறு பொருப்பாளர்களும் புகார் மனு அளித்துள்ளனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu kanniyakumari dmk complaint against bjp

Best of Express