/indian-express-tamil/media/media_files/2025/09/27/stalin-2025-09-27-21-16-34.jpg)
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்து வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல்கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கடந்த 3 வாரங்களாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதில் முதல் வாரம், திருச்சி, அரியலூர் மாவட்டத்திலும், 2-வது வாரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து 3-வது வாரமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில தொடங்கிய இந்த பிரச்சாரத்தில் முதலில் நாமக்கலில் மக்கள் மத்தியில் உரையாற்றிய தலைவர் விஜய், அடுத்து கரூர் மாவட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், விஜய் பேச தொடங்கும்போதே சிலர் மயக்கமாகி கீழே விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த சற்று நேரத்தில் 60 வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில். குழந்தைகள் உட்பட பலர் மயக்கமடைந்ததாக தகவல்கள் வெளியானது.
இதனிடையே தற்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 77 பேர் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாகவும், 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்த துயர சம்பவம் குறித்து தங்கள் இரங்கல் மற்றும் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இச்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூரில் கூட்ட நெரிசலில் இவ்வளவு பேர் உயிரிழப்புக்கு காரணம் என்ன? நெரிசல் ஏற்பட்டது எதனால்? நடந்தது என்ன? என்று முழு விளக்க அறிக்கை அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம், சிகிச்சை பெற்று வீடு திரும்புவோருக்கு தலா ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.