Advertisment

கடன் சுமையால் கேரள அரசு பேருந்து போக்குவரத்து குறைப்பு; தமிழக- கேரள பயணிகள் அவதி

கடன்சுமை காரணமாக கேரள அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்துகள் குறைப்பு. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பயணிகள் அவதி. வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் அவலம்

author-image
WebDesk
New Update
கடன் சுமையால் கேரள அரசு பேருந்து போக்குவரத்து குறைப்பு; தமிழக- கேரள பயணிகள் அவதி

Tamilnadu - Kerala bus transportation issues in kovai: வருமானத்தை விட டீசல் செலவு அதிகமானதால் கேரளா போக்குவரத்து கழகம் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்ததால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisment

கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்: ”சிண்ட்ரெல்லாவின் ஒத்த செருப்பு எங்களிடம் இருக்கிறது”: பழனிவேல் தியாகராஜன் ட்வீட்

publive-image

போக்குவரத்துக் கழகத்தின் சராசரி தினசரி வருவாய் விட டீசல் செலவு அதிகரித்து வருவதால், நீண்ட தூர சேவை பேருந்துகள் மற்றும் 50 சதவீத சாதாரண சேவை பேருந்துகள் குறைக்கப்பட்டு உள்ளன.

கடன் சுமை காரணமாக பல்வேறு மாநிலத்தின் சாதாரண சேவை பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதால், கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் கேரளா மாநில பேருந்துகள் இல்லாமல் பயணிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

publive-image

குறிப்பாக கோவையில் இருந்து கேரளாவிற்கு தொழில் சம்மந்தமாக செல்லும் பயணிகள், அதே போல இரண்டு நாட்கள் தொடர் அரசு விடுமுறை என்பதால், சொந்த ஊருக்கு செல்வதற்கும் உரிய பேருந்து வசதி இல்லாமல் 300 க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்திற்காக வரிசையில் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

publive-image

தகவல் அறிந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment