/indian-express-tamil/media/media_files/0xdratLpnvDRFdYHBWfv.jpg)
உதகை நீதிமன்றம்
கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களவை சி.பி.சி.டி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத் துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், ஆய்வை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணைக்கு சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி (ADSP) முருகவேல் தலைமையிலான போலீசார் மற்றும்அரசு வழக்கறிஞர் கனகராஜ் குற்றம்சாட்டபட்டவர்கள் தரப்பில், சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த விசாரணையில் கடந்த நடைபெற்ற விசாரணையின் போது எதிரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவை நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனுவிற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கபட்டது. இதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர், கொடநாடு பங்களாவை நீதிமன்றத்தின் மூலம் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும்இல்லை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்றுக் கொண்ட மாவட்ட நீதிபதி நிபுணர்குழு கொடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம் என்றும் அதனை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சாட்சியங்களை அழிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை மார்ச் 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதன் மூலம் கொடநாடு பங்களா விரைவில் அரசு தரப்பில் சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.