Advertisment

கொடநாடு வழக்கு : விசாரணை வளையத்தில் பழனிச்சாமி, சசிகலா? காவல்துறைக்கு முக்கிய உத்தரவு

Tamil news Update : தமிழகத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் முதல்வரிடம் விசாரணை நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
கொடநாடு வழக்கு : விசாரணை வளையத்தில் பழனிச்சாமி, சசிகலா? காவல்துறைக்கு முக்கிய உத்தரவு

Tamilnadu Kodanadu Case Update : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டத்த்தில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா இறந்த நிலையில். அடுத்த 4 மாதத்தில் (கடந்த 2017- ஏப்ரல் 23) இந்த கொடநாடு எஸ்டேட்டில் திடீரென புகுந்த மர்மநபர்கள் அங்கு காவலர் பணியில் இருந்த ஓம் பஹதூர் என்பவரை கொலை செய்துவிட்டு எஸ்டேட் பங்களாவில் இருந்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றனர்.

Advertisment

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இது தொடாபாக நீலகிரி ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை இறுதிகட்டத்தை நெருங்கியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில வாரஙகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் காவல்துறையினர் மேல்விசாரணை நடத்தினர்.

ஆனால் இந்த மேல்விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப்ட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் மனுவில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான் பேசியுள்ளார். ஆனால் அவரது பேச்சை நீதிமன்றம் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும் இந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது குறித்து சசிகலா மற்றும் இளவரசிக்கு தான் தெரியும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணையில், இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா ஆகியோரிடம் விசாரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மனுதாரர் தனது மனுவில் தெளிவாக குறிப்பிடவில்லை இது குறித்து மனுதாரர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, வரும் அக்டோபர் 1-ந் தேதி இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீலகிரி நீதிமன்றத்தில் வரவுள்ளதால், இந்த மனு தொடர்பாக 3 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

முன்னதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி கொடுத்த நீலகிரி நீதிமன்றம், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kodanad Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment