டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் கோவை வந்தடைந்த பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், டெல்லியில் பாஜக அதிமுக தலைவர்கள் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே டெல்லி சென்றேன். அங்கு இருக்கும் போது எனக்கு சில மீடியாக்கள் போன் பண்ணி கேட்டார்கள், நான் பேச்சுவார்த்தையில் உடனிருந்ததாக தவறான செய்தி பரப்பபட்டு இருக்கிறது.
நேற்று மாலை முழுவதும் டெல்லியில் கட்சி பணிகளில் தான் இருந்தேன் தொலைக்காட்சி செய்தியை பார்த்தும், பிறர் சொல்லியும் தான் அதிமுக தலைவர்கள் டெல்லி வந்து இருப்பது தெரியவந்தது அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதும் தெரியாது, நான் பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்ததாக சொல்வது முற்றிலும் தவறான கருத்து என்று கூறியுள்ளார்..
மேலும் பா.ஜ.க மகளிர் அணி தலைவராக பிரதமரின் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது தொடர்பாகவே டெல்லி சென்றேன் கூட்டணி தொடர்பான விவகாரங்களில் தேசிய தலைமை மட்டுமே முடிவு எடுக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“