Advertisment

கூடங்குளம் அணுமின் திட்டம் : 5 மற்றும் 6-வது யூனிட் கட்டுமான பணிகள் தொடக்கம்

Kudankulam NPP Construction : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5 மற்றும் 6-வது யூனிட்க்கான கட்டுமானப்பணிகள் இன்று தொடங்கியது.

author-image
WebDesk
New Update
கூடங்குளம் அணுமின் திட்டம் : 5 மற்றும் 6-வது யூனிட் கட்டுமான பணிகள் தொடக்கம்

Kudankulam Nuclear Power Project Tamil News : திருநெல்வேலி குடங்குளம் அணுமின் திட்டத்தில் (கே.கே.என்.பி.பி) 2000 மெகாவாட் (2 எக்ஸ் 1000) யூனிட் 5 மற்றும் 6 இன் கட்டுமானப்பணிகள் 'கான்கிரீட் முதல் ஊற்றலுடன்' முதற்கட்ட பணிகள் இன்று (ஜூன் 29) தொடங்கியது. அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தித் துறையின் செயலாளருமான கமலேஷ் நீல்காந்த் வியாஸ் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் இத்திட்டத்தை, தொடங்கி வைத்தார்.

Advertisment

ரோசாட்டம் டைரக்டர் ஜெனரல் அலெக்ஸி லிகாச்சேவ் மற்றும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சதீஷ் கோமர் சர்மா ஆகியோரும் இந்த நிகழ்வில் என்.பி.சி.ஐ.எல், அணுசக்தி துறை மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோவின் மூத்த அதிகாரிகளுடன் பங்கேற்றனர்.

கே.கே.என்.பி.பி ஆறு யூனிட் ஒளி நீர் உலைகளைக் கொண்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் திறன் கொண்டவை. இது ரஷ்யா கூட்டமைப்பின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் 2 எக்ஸ் எஸ் 1000 மெகாவாட் கொண்டு மூன்று கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 1 மற்றும் 2 யூனிட்கள், 2.000 மெகாவாட் ஒருங்கிணைந்த திறன் கொண்டவை, இதன் மூலம் இன்னும் 57,400 மில்லியனுக்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படுகின்றன

3 மற்றும் 4 யூனிட்களின் கட்டுமானம் இரண்டாம் கட்டத்தில் நடந்து வருகிறது, மொத்தம் 2.000 மெகாவாட் திறன் கொண்ட இந்த  யூனிட்கள் கிட்டத்தட்ட 50% பணிகள் நிறைவடைந்துள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் தாமதமாகிவிட்டதாகவும், தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், பணிகளை விரைவுபடுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கே.கே.என்.பி.பி அதிகாரிகள் கூறியுள்னர்.

தொடர்ந்து  5 மற்றும் 6 யூனிட்களின் கட்டுமான பணிகள் முறையே 66 மாதங்கள் மற்றும் 75 மாதங்களில் முடிக்கப்படும். இந்த திட்டங்கள் முடிந்ததும், கே.கே.என்.பி.பி-யில் உள்ள ஆறு அலகுகள் 2028 ஆம் ஆண்டில் 6,000 மெகாவாட் சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment