Advertisment

Tamil News Today : கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு தேவை - தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்ப விதிகள் என்ற பெயரில் சமூக ஊடக நிறுவனங்களை மிரட்டி அவற்றைப் பயன்படுத்தும் மக்களின் அந்தரங்கத் தரவுகளை கண்காணிக்க முயற்சிக்கும் பாஜக அரசின் சர்வாதிகாரப் போக்கை கண்டிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil News Today : கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு தேவை - தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

6 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையவில்லை

Advertisment

தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2ஆவது அலையால் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை

இந்திய பொருளாதாரத்தில் கொரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட அளவுக்கு தற்போது பாதிப்பு ஏற்படவில்லை.இருப்பினும் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

18,980 டன் ஆக்சிஜன் விநியோகம்- மத்திய அரசு

நாடு முழுவதும் இதுவரை 18,980 டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 284 ஆக்சிஜன் விரைவு ரயில்கள் 15 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

மேற்கு வங்க அரசு தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு ஒப்படைக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தங்கம் தென்னரசுவும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"


  • 22:03 (IST) 28 May 2021
    கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு தேவை - தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

    கொரோனா தடுப்பூசிகளுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு தேவை என 43வது ஜி.எஸ்.டி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.


  • 20:45 (IST) 28 May 2021
    தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு

    தடகளப் பயிற்சியாளரும் சுங்கத்துறை உதவி ஆணையருமான நாகராஜன் மீது பூக்கடை காவல் நிலையத்தில் போக்ஸோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 20:42 (IST) 28 May 2021
    நிவாரண நிதி வழங்கும் குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் ஒன்று அனுப்பி வைக்கப்படும் - ஸ்டாலின்

    பிஞ்சு உள்ளங்களின் பெருங்கருணை நெகிழ வைக்கிறது - நிவாரண நிதி வழங்கும் குழந்தைகளுக்கு திருக்குறள் நூல் ஒன்று அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 20:39 (IST) 28 May 2021
    ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

    இந்திய தொழில் கூட்டமைப்பு மூலம் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட 750 டன் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 8 மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.


  • 19:40 (IST) 28 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா; 486 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,079 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை 20 லட்சத்து 9 ஆயிரத்து 700 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 486 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை மொத்தம் 22,775 பேர் உயிரிழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 31,255 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 பேர் தொற்றில் இருர்ந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 2,762 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  • 19:06 (IST) 28 May 2021
    ஜி.எஸ்.டி. வரியை செயல்படுத்தியதில் குறைபாடு - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேச்சு

    ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஜி.எஸ்.டி. வரியை அவசர கதியில் செயல்படுத்தியதால் அடிப்படை குறைபாடு உள்ளது ஜி.எஸ்.டி வரியின் வடிவமைப்பு, சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏற்றதாக இல்லை. மாநில அரசுகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையைப் பெற மத்திய அரசிடம் போராட வேண்டியிருக்கிறது” என்று பேசியுள்ளார்.


  • 18:32 (IST) 28 May 2021
    தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

    தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி காலை 6மணி வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


  • 17:23 (IST) 28 May 2021
    2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கபோவதில்லை - ரிசர்வ் வங்கி

    2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சடிக்க போவதில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டைப் போலவே, 2020-21 நிதியாண்டிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கவில்லை என்று எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது,.2021 மார்ச் மாத நிலவரப்படி, நாட்டில் ஒட்டுமொத்தமாக பணப்புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 17 புள்ளி3 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இது 2020ல் 22 புள்ளி 6 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  


  • 17:21 (IST) 28 May 2021
    அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை

    கொரோனா தொற்று காலத்தில் வணிகர்ளை "முன்களப் பணியாளராக அறிவிக்க வேண்டும்" என்று அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


  • 17:20 (IST) 28 May 2021
    மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

    கொரோனா தொற்று பாதிப்பினால், கடந்த ஏப்ரல், மே, மற்றும் ஜூன் மாதங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் ஆங்கில முறை மருத்துவர்களுக்கு ரூ.30,000, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.15,000, செவிலியர்களுக்கு ரூ.20,000 வழங்கப்பட உள்ளது


  • 17:19 (IST) 28 May 2021
    மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

    கொரோனா தொற்று பாதிப்பினால், கடந்த ஏப்ரல், மே, மற்றும் ஜூன் மாதங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் ஆங்கில முறை மருத்துவர்களுக்கு ரூ.30,000, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.15,000, செவிலியர்களுக்கு ரூ.20,000 வழங்கப்பட உள்ளது


  • 16:34 (IST) 28 May 2021
    யாஸ் புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்நிலை காரணமாக பலத்த மழை பெய்த நிலையில், கடந்த வாரம் கடரோல மாநிலங்களில் யாஸ் புயல் தாக்கியது. இதனால் ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் பலத்த இழப்பை சந்தித்தது. இந்நிலையில், தற்போது யாஸ் புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.


  • 16:10 (IST) 28 May 2021
    ஊரடங்கு விதிமுறை மீறல்; 3,361 வழக்குகள் பதிவு

    தமிழக்தில் கொரேனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி வெளியில் வருபவர்கள் மீது வழங்கு பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், இதுவரை ஊரடங்கு விதிமுறை மீறல்; 3,361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


  • 16:08 (IST) 28 May 2021
    சென்னையில், 72% காவலர்களுக்குத் தடுப்பூசி

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த 2வது அலை பாதிப்பில், 1,500 காவலர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னையில், 72% காவலர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 16:05 (IST) 28 May 2021
    தமிழக அரசுக்கு நீதிமன்றம் யோசனை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுளள முன்கள பணியாளர் இறந்தால் குடும்பத்தாருக்கு வேலை கொடுக்க தரலாம் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.


  • 15:34 (IST) 28 May 2021
    ஜூன் 30 வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு...!

    கொரோனா பரவல் காரணமாக வரும் ஜூன் 30ம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிக்ப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


  • 14:16 (IST) 28 May 2021
    பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் - அமைச்சர் அன்பில் மகேஸ்...!

    கொரோனா சூழலில் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் நடக்கும் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.


  • 13:53 (IST) 28 May 2021
    மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு!

    "கொரோனா என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கு புரியவில்லை. கொரோனா 2ம் அலை உருவாகும் என ஏற்கனவே நான் எச்சரித்து இருந்தேன். ஆனால் எனது எச்சரிக்கையை மத்திய அரசு ஏளனம் செய்துவிட்டது" என்று மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


  • 13:41 (IST) 28 May 2021
    தலைநகரில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு - ஊரடங்கில் தளர்வு அறிவிப்பு

    தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், வரும் 31ம் தேதி முதல் ஊரடங்கில் பல தளர்வுகளை அளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


  • 13:28 (IST) 28 May 2021
    புயல் பாதிப்பு காரணமாக ஒடிசா முதல்வருடன் பிரதமர் ஆலோசனை

    யாஸ் புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தார். அதன்பிறகு ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நவீன் பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளுடன் புயல் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.


  • 13:26 (IST) 28 May 2021
    இறந்த கொரோனா நோயாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்

    ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க டெல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது.


  • 13:24 (IST) 28 May 2021
    பாலியல் விவகாரத்தில் ஆதாரங்கள் உள்ளன

    சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.


  • 13:22 (IST) 28 May 2021
    உயிரிழக்கும் மருத்துவ பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

    மருத்துவர், செவிலியர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட கொரோனா தடுப்பில் ஈடுபட்டு உயிரிழக்கும் பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தரலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்திருக்கிறது.


  • 12:04 (IST) 28 May 2021
    கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வு - கோவை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்

    கொரோனா தடுப்பு பணிகள் ஆய்விற்காக நாளை மறுநாள் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை செல்ல இருக்கிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.


  • 12:02 (IST) 28 May 2021
    நிர்மலா சீதாராமன் தலைமையில் 43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடக்கம்

    43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. தமிழகத்தின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன்முறையாக ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.


  • 10:56 (IST) 28 May 2021
    சென்னையில் தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.36,784க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 10:42 (IST) 28 May 2021
    சாப்பாட்டு ராமன் யூடியூப் சேனல் பொற்செழியன் கைது

    கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்தது தொடர்பாக சாப்பாட்டு ராமன் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த பொற்செழியன் கைது செய்யப்பட்டார்.


  • 10:08 (IST) 28 May 2021
    குறையும் கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் ஒரே நாளில் 1,86,364 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 3,660 பேர் உயிரிழந்துள்ளனர். 44 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.


  • 09:57 (IST) 28 May 2021
    மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்

    சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

    பாலியல் புகார் தொடர்பாக குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

    மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


  • 09:47 (IST) 28 May 2021
    மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்

    சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

    பாலியல் புகார் தொடர்பாக குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.சம்பந்தப்பட்ட ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.


  • 09:46 (IST) 28 May 2021
    மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்

    சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

    பாலியல் புகார் தொடர்பாக குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

    மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


  • 09:35 (IST) 28 May 2021
    பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிப்பு

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் 30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க உத்தரவிட்ட நிலையில் விடுவிப்பு.


  • 08:58 (IST) 28 May 2021
    ராஜகோபாலன் மீது மேலும் 2 பாலியல் புகார்

    புழல் சிறையில் உள்ள சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் பாலியல் புகார் அளித்துள்ளனர். புதிய 2 புகார்கள் தொடர்பாக அசோக்நகர் மகளிர் போலீசார் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.


Tamilnadu Live News Udpate Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment