தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்
சிபிஐ புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்
சி.பி.ஐ. புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகள் பணியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு
பள்ளிகளில் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. நல்ல ஆசிரியர்களுக்கு களங்கம் வராத வகையில் இந்த குழு அமையும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிப்பை துவக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பை விரைந்து துவக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தடுப்பூசி - மத்திய அரசின் உத்தரவு
தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவதற்கு ஏதுவாக திட்டம் வகுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை தவிர்த்து , நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யவும், கண்காணிக்கவும் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
கொரோனா நிதி 2வது தவணை ஜூன் 3-ல் வழங்கப்படுகிறது
கொரோனா நிவாரண நிதி 2வது தவணை வழங்கும் திட்டத்தை சென்னையில் ஜூன் 3-ந் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் ஜூன் 3 ஆம் தேதி துவங்கி வைக்கவுள்ளார். மற்ற மாவட்டங்களில் இத்திட்டம் ஜூன் 5-ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
கத்தார் சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
- 20:23 (IST) 26 May 2021ஆன்லைன் வகுப்பு விவகாரம் - முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் குறித்து துரித விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளில் முறையற்று நடப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மாணவ மாணவிகள் புகார் அளிக்க ஹெல்ப் லைன் எண் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- 20:18 (IST) 26 May 2021தமிழகத்தில் ஒரே நாளில் 33,764 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,764 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 19,45,260 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 475 பேர் கொரோன தோற்றுக்கு பலியாகியுள்ள நிலையில, மொத்த பலி எண்ணிக்கை 21815 ஆக உயர்ந்துள்ளது.
- 19:37 (IST) 26 May 2021பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் : கமல்ஹாசன் கருத்து
பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்தடுத்த பள்ளிகளிலும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வருவதால் தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவை அமைத்து போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும் என்றும், ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும் என்றும், பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்கு காது கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
- 17:56 (IST) 26 May 202130 நாள் பரோல் வழங்கக்கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு நளினி கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தனக்கு 30 நாள் பரோல் வழங்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். நளினி பரோல் மனுவை கடந்த 20ம் தேதி வேலூர் சிறை நிராகரித்த நிலையில் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
- 17:51 (IST) 26 May 2021டெல்லியில் ஒரு தடுப்பூசி கூட கையிருப்பு இல்லை - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் ஒரு தடுப்பூசி கூட கையிருப்பு இல்லை; தடுப்பூசி மையங்கள் அனைத்து பூட்டப்பட்டு வருகின்றன; மாநிலங்களுக்கு தடுப்பூசி விநியோகம், செய்வது மத்திய அரசின் பொறுப்பு; இனியும் தாமதித்தால் பல உயிர்களை இழக்க நேரிடும்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
- 17:25 (IST) 26 May 2021வேலூர் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
- 16:59 (IST) 26 May 2021மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
கொரோனாவுக்கு எதிரான போரில் மாநில அரசுகள் தோல்வி அடைந்தால் அது இந்தியாவின் தோல்விதான் என்றும் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்
- 16:40 (IST) 26 May 2021130 நாட்களில் 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
130 நாட்களில் 20 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
- 16:10 (IST) 26 May 2021பள்ளி பிரச்னையை சாதி பிரச்னையாக திருப்ப முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது - மநீ்ம தலைவர் கமல்ஹாசன்
பள்ளி பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்காக சாதி பிரச்னையாக திருப்ப முயற்சிப்பதுகண்டிக்கத்தக்கது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும் குற்றம் இழைத்தவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- 15:54 (IST) 26 May 2021பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு இடைக்கால தடை
20,000 மெட்ரிக் டன் பருப்பு, 80 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது .
- 15:41 (IST) 26 May 2021கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது பிரச்சினை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
- 15:27 (IST) 26 May 2021அரசியல் காரணங்களுக்காக அரசு அதிகாரிகளை பந்தாட வேண்டாம் - சீமான்
பேரிடர் சூழலில் அரசியல் காரணங்களுக்காக, நிர்வாக அனுபவம் வாய்ந்த அரசு அதிகாரிகளைப் பந்தாடும் போக்கினை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
- 15:20 (IST) 26 May 2021விவசாயிகளின் போராட்ட கோரிக்கை நிறைவேற வேண்டும்: கமல்
6 மாதங்களை எட்டியிருக்கும் விவசாயிகள் போராட்டம் வெற்றியடையவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 26, 2021 - 15:17 (IST) 26 May 2021நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட்!
நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரட் ஆகியவற்றையும் கொண்டு செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
- 14:45 (IST) 26 May 2021கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கண்கள் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த பெண், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
- 14:43 (IST) 26 May 2021அதிமுக ஆட்சிபோல அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்குக: இபிஎஸ்
அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டதுபோல 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உணவுத்தொகுப்பு மற்றும் ரூ.2000 நிவாரண உதவியை அரசு உடனே வழங்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
- 14:29 (IST) 26 May 2021கன்னியாகுமரியில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்
கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
- 14:20 (IST) 26 May 2021கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆணையராக பீலா ராஜேஷ்
தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை ஆணையராக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். வணிகவரித்துறை செயலாளராக இருந்த இவரை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
- 13:05 (IST) 26 May 2021கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம்
கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 13:04 (IST) 26 May 2021கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை
கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியுடைந்துள்ளனர். பேச்சிப்பாறை உள்ளிட்ட முக்கிய அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்.
- 12:33 (IST) 26 May 2021செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையம் - முதல்வர் ஆலோசனை
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. தலைமைச் செயலகத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு , தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறைசார் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுங்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் தடுப்பூசி உற்பத்தி மையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை.
- 12:23 (IST) 26 May 2021வேளான் சட்டங்கள் - கருப்பு தினம் அனுசரிப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற ஆரம்பித்த போராட்டங்கள் 6 மாதத்தை நிறைவடைந்ததை ஒட்டி உ.பி., ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- 12:20 (IST) 26 May 2021அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 நிவாரணம்
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 நிவாரணம் வழங்க அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
- 12:19 (IST) 26 May 2021மின்வாரிய ஊழியர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்: ஓபிஎஸ்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவும், முன்கள பணியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
- 12:03 (IST) 26 May 2021கொரோனா சிகிச்சை மையமாக மாறிய எழும்பூர் காவலர் மருத்துவமனை
எழும்பூரில் காவலர்களுக்காக செயல்பட்டு வரும் மருத்துவமனையை தற்போது கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளது அரசு
- 12:01 (IST) 26 May 20211400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் - கொடியசைத்து துவங்கி வைத்தார் முதல்வர்
1400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அடங்கிய 10 வாகனங்களின் 20 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொடியசைத்து இந்நிகழ்வை துவங்கி வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்
- 12:00 (IST) 26 May 202182,000 கோவாக்ஸின் தமிழகம் வருகை
பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கோவாக்ஸின் தடுப்பூசிகளின் 82 ஆயிரம் டோஸ்கள் இன்று தமிழகம் வந்துள்ளது.
- 10:57 (IST) 26 May 2021முழு ஊரடங்கு நீட்டிப்பு? -முதலமைச்சர் விளக்கம்
கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என முதல்வர் தெரிவித்தார். கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கவே முழு ஊரடங்கு எனவும் அதன் பலன் கிடைக்க தொடங்கியுள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதாகவும், தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 10:51 (IST) 26 May 2021காய்கறி வாகனங்களில் முட்டை, பிரட்
பொதுமக்களின் தேவை கருதி நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரட் ஆகியவற்றையும் கொண்டு செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
- 10:50 (IST) 26 May 2021காய்கறி வாகனங்களில் முட்டை, பிரட்
பொதுமக்களின் தேவை கருதி நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரட் ஆகியவற்றையும் கொண்டு செல்ல வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
- 10:46 (IST) 26 May 2021இந்தியாவில் ஒரே நாளில் 2, 08, 921 பேருக்கு கொரோனா
இந்தியாவில் ஒரே நாளில் 2, 08, 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,157 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 2,95,955 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
- 10:44 (IST) 26 May 2021தடுப்பூசி வீண் -தமிழகம் 3வது இடம்
கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதில் தமிழகம் (15.5%) மூன்றாவது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- 09:52 (IST) 26 May 2021யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது
ஒடிசா அருகே வங்கக்கடலில் அதி தீவிர புயலான யாஸ் கரையை கடக்க தொடங்கியது, யாஸ் புயல் கரையை கடந்து வருதால் பலத்த காற்றுடன் ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது.
- 09:06 (IST) 26 May 2021இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம்
இந்தாண்டின் முழு சந்திர கிரகணம் இன்றைய தினம் மாலை 3:15 முதல் 6:23 மணி வரை நிகழ உள்ளது. கிரகண நேரத்தில் பெரிய நிலா அதாவது, 'சூப்பர் மூன் மற்றும் பிளட் மூன்' எனப்படும், ரத்த நிலா தோன்றும் வானியல் நிகழ்வும் நடக்கிறது.
அதை தென்அமெரிக்கா, வடஅமெரிக்கா, ஆசியாவின் சில நாடுகள், ஆஸ்திரேலியா, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும்.இந்தியாவின் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் ஒடிசா, அந்தமான் நிக்கோபர் தீவின் கடலோர பகுதிகளில் பாதி சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.
- 08:52 (IST) 26 May 2021வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக- முதல்வர் வலியுறுத்தல்
விவசாயிகள் நலனுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
விவசாயிகள் போராட்டம் 6 மாதங்களை கடந்த பின்னரும் தீர்வு ஏற்படவில்லை என்றும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.