பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து சேலத்தில் அ.தி.மு.க பிரமுகர் கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து அரசியல் தலைவர்கள் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதையடுத்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளதாக எதிர்கட்சிகள் அதிமுக, பாமக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று (ஆக.5) செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, "தமிழகத்தில் தற்போது நடைபெற்றிருக்கும் கொலைகள் அரசாங்கத்தால் ஏற்பட்டது இல்லை. ஒருவருக்கொருவர் மீது உள்ள முன்பகை, போட்டியின் காரணமாக கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த கொலைகளுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க முடியாது. மேலும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதற்காக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் தற்போது
அமைதிப் பூங்காவாக இருப்பதால்தான், தொழில் செய்வதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“